பதின்மூன்று வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு 36 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இத்தீர்ப்பை கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க வழங்கியுள்ளார்.

சிறைத் தண்டனையுடன், நீதிமன்றத்துக்கு அபராதமாக நாற்பத்தையாயிரம் ரூபாவைச் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட பதின்மூன்று வயதுச் சிறுவனுக்கு நட்ட ஈடாக மூன்று இலட்ச ரூபா வழங்குமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நட்ட ஈட்டை வழங்க முடியாத சந்தர்ப்பத்தில், சிறைத் தண்டனை மேலும் ஆறு வருடங்களால் நீட்டிக்கப்படும்.

மேற்படி சம்பவம் 2002ஆம் ஆண்டு இடம்பெற்றது. பதினைந்து ஆண்டுகள் ஆனபோதும் நீதி வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் கூறியுள்ளனர்.