(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற சீ ஹோக்ஸ் அணிக்கும் புளூ ஈக்ள்ஸ் அணிக்கும் இடையிலான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் அபார ஆட்டத் திறனை வெளிப்படுத்திய சீ ஹோக்ஸ் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட சுப்பர் லீக்கின் முதலாம் சுற்று இந்தப் போட்டியுடன் நிறைவுக்கு வந்தது.
இந்தப் போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே சீ ஹோக்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மொஹமத் ஹஸ்மீர் அநாவசியமாக மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.
ஆனால், அதன் பின்னர் மிகவும் நேர்த்தியாக விளையாடிய அவர் மைதானத்தின் பின்களத்திலிருந்து முன்களம்வரை மிக அற்புதமாக விளையாடி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.

போட்டியின் 12ஆவது நிமிடத்தில் மொஹமத் ஹஸ்மீர் இடதுபுறத்திலிருந்து பரிமாறிய பந்தை டேவிட் கெண்டி கோலாக்கி சீ ஹோக்ஸ் அணியை முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து புளூ ஈக்ள்ஸ் அணி வீரர்கள் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தனர்.
ஆனால், அதன் முன்கள வீரர்கள் விவேகத்துடன் விளையாடததால் சில கோல் போடும் வாய்ப்புகள் தவறிப்போயின.
இடைவேளையின்போது சீ ஹோக்ஸ் 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் திறமையாக விளையாடிய சீ ஹோக்ஸ் அணியினர் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியபோதிலும் அவை பலன்தராமல் போயின.

போட்டியின் 64ஆவது நிமிடத்தில் நவிந்து ஷெஹான் சில்வா வலது புறத்தில் இருந்து நகர்த்தி வந்த பந்தை எஸெக்கியேல் பெட்றிக்குக்கு பரிமாற, அவர் மிகவும் சாமர்த்தியமாக கோலினுள் புகுத்தினார்.
அதன் பின்னர் மேலும் சில வாய்ப்புகளை சீ ஹோக்ஸ் அணியினர் கோட்டை விட்டதுன் புளூ ஈக்ள்ஸுக்கு கிடைத்த வாய்ப்புகளை அதன் முன்கள வீரர்கள் முறையாகப் பயன்படுத்த தவறினர்.
சுப்பர் சிக்ஸ் அக்டோபரில் ஆரம்பம்
இப் போட்டி முடிவுடன் அணிகள் நிலையில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற அப்கன்ட்றி லயன்ஸ், சீ ஹோக்ஸ், கலம்போ எவ்சி, கொட்டாஞ்சேனை றினோன், பேருவளை தர்கா நகர் ரெட் ஸ்டார், களுத்துறை புளூ ஸ்டார் ஆகியன சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஒன்றையொன்று இரண்டு தடவைகள் எதிர்த்தாடவுள்ளன.
இரண்டாம் கட்டப் போட்டிகள் முடிவிலேயே சம்பியன் மற்றும் உப சம்பியன் அணிகள் தீர்மானிக்கப்படும்.
கடைசி நான்கு இடங்களைப் பெற்ற புளூ ஈக்ள்ஸ், டிபெண்டர்ஸ், வென்னப்புவை நியூ யங்ஸ், கொட்டாஞ்சேனை ரட்னம் ஆகியன தரமிறக்கல் சுற்றில் ஒன்றையொன்று இரண்டு தடவைகள் எதிர்த்தாடும்.
சுப்பர் சிக்ஸ் மற்றும் தரமிறக்கல் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பமாகும்.
அணிகளின் இறுதி புள்ளிகள் நிலை




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM