இங்கிலாந்துடனான ரி20 தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டுமா இலங்கை? இரண்டு அணிகளும் இன்று  மோதுகின்றன

15 Sep, 2026 | 07:18 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் சவுத்ஹாம்ப்டன், ரோஸ் பௌல் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்த வருடம் விளையாடிய 16 போட்டிகளில் 13 வெற்றிகளை ஈட்டியுள்ள இங்கிலாந்து, 2 தோல்விகளை மாத்திரமே தழுவியுள்ளது. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் நடப்பு ரி20 உலக சம்பியன் இந்தியாவை வெற்றிகொண்ட இங்கிலாந்து தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு முயற்சிக்கும். இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் முடிவு கிட்டவில்லை.

அதேவேளை, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் தோல்விகளைத் தழுவிய இலங்கைக்கு இந்தத் தொடர் இலகுவாக அமையப்போவதில்லை.

அது மட்டுமல்லாமல் 2014க்குப் பின்னர் சொந்த மண்ணிலும் சரி அந்நிய மண்ணிலும் சரி இங்கிலாந்திடம் தொடர்ச்சியாக 12 தோல்விகளைத் தழுவியுள்ள இலங்கை, அந்தத் தோல்விகளுக்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்க முடியாது.

இரண்டு அணிகளினதும் பெறுபேறுகளை ஒப்பிடும்போது இங்கிலாந்து எந்தளவு பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்பது தெட்டத் தெளிவாகிறது.

மேலும் இந்த வருடம் இலங்கை விளையாடிய 15 சர்வதேச ரி20 போட்டிகளில் 10 தோல்விகளைத் தழுவியுள்ளதால் அதன் பெறுபேறுகள் திருப்திகரமாக இல்லாததை அவதானிக்கலாம்.

இங்கிலாந்தில் தற்போது வறண்ட வானிலை நிலவுவதால் ஆடுகளம் சுழற்சிக்கு சாதகமாக இருக்கும் எனவும் இதன் காரணமாகவே நான்கு சுழல்பந்துவீச்சாளர்களை குழாத்தில் இணைத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவுக் குழுத் தலைவர் கப்பில விஜேகுணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இன்றைய போட்டியில் வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரில் இலங்கை தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, பவன் ரத்நாயக்க, அணிக்கு மீளழைக்கப்பட்டு அணித் தலைமைப் பொறுப்பையும் பெற்றுள்ள சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, ஜனித் லியனகே ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

  

வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே ஆகிய மூவரில் இருவர் சுழல்பந்துவீச்சிலும் துஷ்மன்த சமீர, நுவன் துஷார ஆகியோர் வேகப்பந்துவீச்சிலும் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க விளையாடினால் ஜனித் லியனகே அணியில் இடம்பெறமாட்டார்.

இது இவ்வாறிருக்க, உள்ளூர் ரி20 போட்டிகளில் அபரிமிதமான திறமையை துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி வந்துள்ள அனோரின் டொனல்ட் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுக ஆரம்ப வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரை விட ஜோஸ் பட்லர், அணித் தலைவர் ஹெரி ப்றூக், டொம் பென்டன், ஜோர்டன் கொக்ஸ், வில் ஜெக்ஸ், ஜெமி ஓவர்ட்டன், லியாம் டோசன், ஜொஷ் டங், சொனி பேக்கர், ஆதில் ராஷித் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பெறவுள்ளதாக இங்கிலாந்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து...

2026-10-17 16:25:07
news-image

ஐபிஎல் 2027: டெல்லி கெபிடல்ஸ் அணியின்...

2026-10-17 11:18:53
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-10-16 21:03:05
news-image

40ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு...

2026-10-16 20:39:21
news-image

19 வயதின் கீழ் பெண்கள் மும்முனை...

2026-10-16 20:33:34
news-image

சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது, போட்டிக்கு...

2026-10-16 14:45:40
news-image

2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய...

2026-10-15 12:55:01
news-image

சீ ஹோக்ஸ் அணியை 2 -...

2026-10-15 01:17:48
news-image

குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் அபராம்; இலங்கைக்கு...

2026-10-13 23:00:18
news-image

இலங்கைக்கு 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-10-13 20:51:46
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட பங்களாதேஷ் -...

2026-10-13 21:20:14
news-image

ரென்ஷோ துடுப்பாட்டத்திலும் ஹேஸ்ல்வூட் பந்துவீச்சிலும் அசத்தல்;...

2026-10-13 19:30:55