நாடு ஒரு புதிய அரசியல் கலாசாரத்துடன் முன்னோக்கிச் செல்கிறது - அநுராதபுரம் மாநகர முதல்வர் கருணாரட்ன 

15 Sep, 2026 | 07:01 PM
image

நாடு ஒரு புதிய அரசியல் கலாசாரத்துடன் முன்னோக்கிச் செல்வதாக அநுராதபுரம் மாநகர முதல்வர் கருணாரட்ன தெரிவித்தார்.

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு அநுராதபுரம் மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அநுராதபுரம் மாவட்ட நிகழ்வு அநுராதபுரம் அபய பொது மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தவர் தொடர்ந்து கூறுகையில், 

இந்த முன்னோக்கிய பயணம், பொருளாதார மற்றும் கலாசார மாற்றத்திற்கும் உட்படுவதால், அனைத்து நகர குடிமக்களும் ஒன்றிணைந்து, விரும்பியபடி நகரத்தை ஒரு செழிப்பான நகரமாக மாற்றுவதற்கு பங்களிக்குமாறு நகர் முதல்வர் என்ற வகையில் அழைப்புவிடுக்கின்றேன்.

நாடு பூராவும் இம்மாதம் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்படுவதுடன் அநுராதபுரம் மாநகர எல்லைப் பகுதியில் பல திட்டங்களை மேற்கொள்வதற்கு மாநகர சபை திட்டமிட்டுள்ளது.

அநுராதபுரம் என்பது அனைத்து வகையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அதனால் அழகிய வளமான அனைவரையும் கவரக்கூடிய நகரமாக மாற்றியமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

சென்ற காலங்களில் நகரின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றன. அதற்காக எதிர்வரும் காலத்தில் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

நகரின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியின் ஒவ்வொரு ரூபாவிற்கும் உரிய பயனுள்ள வேலைகளை செய்து அநுராதபுரம் நகரை அழகிய நகரமாக்கும் வேலைத்திட்டத்தினை நாம் பொறுப்புடன் செய்வோம் என மாநகர முதல்வர் கருணாரட்ன தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் உயர் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40