பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள் குழு கொழும்பு தகவல் இணைப்பு மையத்திற்கு விஜயம்

15 Sep, 2026 | 06:10 PM
image

கடல்சார் தகவல் பரிமாற்றத்தில் உள்ள பொதுவான சவால்கள், அனுபவங்கள் மற்றும் தகவல் பகிர்வை வலுப்படுத்துவதற்கான நடைமுறை அணுகுமுறைகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், மடகாஸ்கரின் பிராந்திய கடல்சார் தகவல் ஒருங்கிணைப்பு மையம் (RMIFC), சிஷெல்ஸின் பிராந்திய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான மையம் (RCOC) மற்றும் International Criminal Police Organization (INTERPOL) அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த பிரதிநிதிகள் குழுவினர், செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொழும்பு தகவல் இணைப்பு மையத்திற்கு (IFC Colombo) விஜயம் மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின்போது, தரப்பினருக்கு இடையே அறிவு மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் குறித்த அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், கடல்சார் தகவல் இணைப்பு தொடர்பான பொதுவான சவால்களை அடையாளங்காணல் மற்றும் தகவல் பரிமாற்ற பொறிமுறையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மேலும், கடல்சார் தகவல் ஒருங்கிணைப்பு மையங்களுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையே பயனுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இவ்விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டது. 

மேலும், இவ்விஜயத்தில் மடகாஸ்கரின் பிராந்திய கடல்சார் தகவல் ஒருங்கிணைப்பு மையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு பிரதிநிதிகளும், சிஷெல்ஸின் பிராந்திய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான மையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு பிரதிநிதிகளும், INTERPOL அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று பிரதிநிதிகளும், கொழும்பு தேசிய மத்திய பணியகத்தைப் (NCB Colombo) பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு இணைப்பு அதிகாரியும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59