(நா.தனுஜா)
நீதித்துறையை பொறுத்தமட்டில் தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் கடந்த காலங்களில் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியிருந்ததாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் மரபணு (டி.என்.ஏ) பரிசோதனை ஆய்வகத்தின் செயற்றிறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் அதற்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உபகரணங்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அசூஸா குபோட்டாவினால் பதில் அரச பகுப்பாய்வாளர் காமினி பெரேராவிடம் செவ்வாய்க்கிழமை (15) கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டன. இக்கையளிப்பு நிகழ்வில் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் பிரசன்னமாகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அசூஸா குபோட்டா மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்ட்டின் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை உரிய காலப்பகுதியில் சமர்ப்பிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நவீன பரிசோதனை உபகரணங்களுக்கான தேவைப்பாடு மற்றும் திணைக்களத்தின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு அவசியமான ஏனைய வசதிகள் என்பன பற்றி அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 'கடந்த காலங்களில் தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியிருந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் 118 பதவி வெற்றிடங்கள் காணப்பட்டன.
இந்நிலையில் இப்போது அவசியமான சுமார் 70 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிப்பதை இலக்காகக் கொண்டு அதிகாரிகள் இரவு 10 மணி வரை பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய அறிக்கைகளை 3 மாதங்களுக்கும் குறைந்த காலத்துக்குள் சமர்ப்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆற்றிவரும் சேவை பாராட்டுக்குரியதாகும்' எனத் தெரிவித்தார்.
அதேபோன்று 'சிறைச்சாலைகளின் நிலைவரம் குறித்துப் பரிசீலித்தபோது தடயவியல் அறிக்கைகளைப் பெறுவதில் நிலவும் தாமதம் காரணமாக பிணை பெற்றுக்கொள்ள முடியாமல் போவதே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் எடுத்துரைத்த முக்கிய கரிசனையாகும். இதனைக் கடந்த ஆண்டு அடையாளங்கண்ட நாம், இதற்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் '2022ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் போதைப்பொருளின் எடை 10 கிராமை விட உயர்வாக உள்ள சந்தர்ப்பங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலேயே பிணை மனுத்தாக்கல் செய்யவேண்டியிருப்பதனால், பிணை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன' எனவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM