இயக்குநராகும் நடிகை

Published By: Robert

19 Oct, 2017 | 02:38 PM
image

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’, கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரத்தா சிறிநாத். இவர் தற்போது ஜி.வி பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த போது, எதிர் கால ஆசை என்ன? என கேட்டோம். அதற்கு அவர் எதிர்காலத்தில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறேனோ இல்லையோ நிச்சயம் ஒரு நாடகத்தை எழுதி இயக்கும் எண்ணம் இருக்கிறது’ என்றார். ஆக எதிர்காலத்தில் இவரும் இயக்குநராகுவார். அதனால் அவருக்கு இப்போதே வாழ்த்து தெரிவிப்போம். 

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்