(எம்.மனோசித்ரா)
புலனாய்வுப் பிரிவிக் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வைத்து அவரிடம் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாது. மருத்துவ சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னரே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை (15) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுரேஷ் சலே தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்து ஆராய்வதற்கு விசேட வைத்தியர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அவ்வைத்தியக் குழுவின் அறிக்கைக்கு அமையவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். தற்போது அவருக்குப் பெரியளவிலான சுகாதாரச் சிக்கல்கள் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. அவர் ஆரோக்கியமாகவே உள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரிடம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. அவர் எப்போதும் வைத்தியசாலையிலேயே இருக்கப் போவதில்லை. சிகிச்சைகள் முடிவடைந்து வெளியேறியதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அதற்கான கால அவகாசம் போதாத பட்சத்தில் விசாரணைக்காலம் மேலும் நீடிக்கப்படும்.
சுரேஷ் சலேவின் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு வைத்தியசாலை நிர்வாகத்திற்கு உள்ளது என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM