மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக கூட்டுறவு மாற வேண்டும் - யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன்

15 Sep, 2026 | 05:13 PM
image

(எம்.நியூட்டன்)

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக கூட்டுறவு மாற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டம் கூட்டுறவுத் துறையில் நீண்ட வரலாற்றையும் பெருமையையும் கொண்ட மாவட்டமாகும். குறிப்பாக, நெருக்கடியான காலங்களிலும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி முக்கிய பங்காற்றியுள்ளன.

தற்போதைய போட்டிமிக்க சூழலில், கூட்டுறவுச் சங்கங்கள் காலத்திற்கேற்ப தங்களது வணிக உத்திகள் மற்றும் சேவை முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகும். ‘Coop City’ என்ற வலுவான அடையாளத்தை உருவாக்கி, ஒரே கூரையின் கீழ் மளிகை, மருந்து, எரிபொருள், டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குவதுடன், இளைஞர்களை தொழில்நுட்பத்துடன் இணைத்து கூட்டுறவுத் துறையை நவீனப்படுத்த வேண்டும்.

தனியார் துறையை விட குறைந்த விலையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதும், மக்களுக்கு தேவையான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் கூட்டுறவுத் துறையின் முக்கிய பலமாகும். சேவை ஒரு கடமை என்ற அடிப்படையில் மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக கூட்டுறவு மாற வேண்டும்.

பழமையான சிறந்த அனுபவங்களைப் பாதுகாத்துக்கொண்டு, புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, மக்களை மையப்படுத்திய சேவைகளை முன்னெடுப்பதன் மூலமே கூட்டுறவுத் துறையை எதிர்காலத்திற்கு வலுவாகக் கொண்டு செல்ல முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59