(நமது நிருபர்)
போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு தலைமையில் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமாகியுள்ளது.
இன்று (15) செவ்வாய்க்கிழமை முதல் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டை, சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் மற்றும் இலங்கை தேசிய மாலுமிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
உலகளாவிய ரீதியில் போக்குவரத்துத் துறை சார்ந்த தொழிலாளர்களின் உரிமைகளையும், தொழில்நுட்ப மாற்றங்களையும் ஆலோசிக்கும் வகையில் அமைந்துள்ள இம்மாநாட்டில், உலகின் 60 நாடுகளைச் சேர்ந்த சுமார் 90 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் பலரும் இதில் நேரடியாகப் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
குறிப்பாக, சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச்செயலாளர் ஸ்டீபன் காட்டன் (Mr. Stephen Cotton), புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஃபிராங்க் மோரீல் (Mr. Frank Moreel), 'எதிர்கால தொழிலாளர்கள்' பிரிவின் பணிப்பாளர் பேக்கர் குண்டக்சி (Ms. Baker Khundakji), இளைஞர் பிரிவின் பிரதிநிதி ப்ரீதி சிங் (Preethi Singh) மற்றும் 'எதிர்கால வேலைவாய்ப்பு' ஆலோசனைக் குழுவின் தலைவர் ஹொராசியோ கல்குல்லி (Mr. Horacio Calculli) ஆகிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து இலங்கை தேசிய மாலுமிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி போவா அதுகோரல உள்ளிட்ட உள்நாட்டுப் பிரதிநிதிகளும் இதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
நவீன காலத்தில் வேகமான வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது போக்குவரத்துத் துறையிலும் அதன் ஊழியர்களின் வேலைத்தளங்களிலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆழமாக ஆராய்வதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும். போக்குவரத்துத் துறைச் சார்ந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயனுள்ள முறையில் கையாள்வது, அதன் முக்கியத்துவம் என்ன, மற்றும் தொழில்முறையில் பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை அளவுகோல்கள் மற்றும் விதிமுறைகள் என்ன என்பது குறித்து சர்வதேச ரீதியிலான நிபுணர்கள் மூலம் விரிவான விழிப்புணர்வுகளும் வழிகாட்டல்களும் பிரதிநிதிகளுக்கு இம்மாநாட்டின் போது வழங்கப்படவுள்ளன.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM