(இராஜதுரை ஹஷான்)
புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க முடியாது. அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய தொழிற்சங்க போராட்டங்கள் முறையற்றது. புகையிரத தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் புகையிரத தொழிற்சங்கங்களின் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டம் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
புகையிரத தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (நேற்று முன்தினம்) இடம்பெற்றது. இதன்போது புகையிரத தொழிற்சங்கத்தினர் புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளரை பதவி நீக்க வேண்டும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவி நீக்கும் அளவுக்கு அவர் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.புகையிரத சேவையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கின்ற நிலையில் தான் ஒருசிலர் அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க முடியாது. அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய தொழிற்சங்க போராட்டங்கள் முறையற்றது. புகையிரத தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டும்.
ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் புகையிரத சேவையில் ஈடுபடும் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும். அதனை தவிர்த்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி தமது நோக்கத்தை அடைய முயற்சிக்க கூடாது என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM