நுவரெலியா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிவதால், வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் மட்டக்குதிரைகள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படுவதால், அவை உணவு தேடி பிரதான நகரைச் சுற்றித் திரிகின்றன. வீதியோரங்களில் உள்ள புற்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளைக்கூட அவை உணவாக உட்கொள்வதுடன், பின்னர் பிரதான வீதிகளிலேயே படுத்து உறங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மட்டக்குதிரைகள் கூட்டமாக வீதிகளைக் கடப்பதும், வீதிகளில் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதும், வாகனங்கள் மீது மோதுவதும் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரைகள் வாகனங்களில் பயணிப்பவர்களையும், பாதசாரிகளையும் துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் சம்பவங்களும் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, வீதிகளில் மட்டக்குதிரைகளின் சாணம் மற்றும் சிறுநீர் தேங்குவதால் வழுக்கும் தன்மையும் அதிகரித்து, விபத்து அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மட்டக்குதிரைகளை வளர்ப்போர் நகரசபையின் அனுமதியைப் பெற்று தங்களது இடங்களில் தொழுவங்களை அமைத்து அவற்றைப் பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகள் சுற்றித்திரிந்தால், அவற்றைப் பிடித்து பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபையினால் கடந்த ஆண்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், நகரில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குறுகிய வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும் இடையூறு ஏற்படுவதாகவும், மட்டக்குதிரைகளின் நடமாட்டத்தால் வாகன சாரதிகள் நாளாந்தம் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்குதிரைகளை சவாரிக்காக பயன்படுத்தி வருமானம் ஈட்டும் உரிமையாளர்கள், அவற்றை முறையாகப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகரிலும் பிரதான வீதிகளிலும் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளைப் பிடித்து, நகரசபைக்குச் சொந்தமான பாதுகாப்பான இடத்தில் பராமரிப்பதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர, மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் அவற்றை முறையாக தொழுவங்களில் பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மட்டக்குதிரைகள் பிரதான நகரம் மற்றும் வீதிகளில் சுற்றித்திரியாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாநகர சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM