நடிகை ஸ்ரேயா சரண் சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'சண்டக்காரி' திரைப்படம் - எதிர்வரும் 18 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
இயக்குநர் ஆர். மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்காரி' திரைப்படத்தில் விமல், ஸ்ரேயா சரண், பிரபு ,'புன்னகை பூ' கீதா, சத்யன், கே ஆர் விஜயா, ரேகா ,தேவ் கில், உமா பத்மநாபன், 'மகாநதி' சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். பி. குரு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாஸ் புரொடக்ஷன் கொர்ப்பரேசன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'மை பாஸ்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில்... லண்டனில் உள்ள மிகப் பெரிய தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றும் பெண்ணிற்கு, அவருக்கு கீழ் பணியாற்றும் ஆண் ஊழியர் மீது காதல் உண்டாகிறது. இந்த காதல் என்ன ஆனது? என்பதுதான் இப்படத்தின் கதை.
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படம் நகைச்சுவை நட்சத்திரங்களின் கூட்டணியால் வணிக ரீதியான வெற்றியை பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM