நடிகை அஞ்சலி நாயர் கதையின் நாயகிகளுள் ஒருவராக நடித்திருக்கும் 'ட்ரோன்ஸ்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அஸ்க்கு மச்சா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள' ட்ரோன்ஸ்' திரைப்படத்தில் சித்தி இத்னானி , அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம் ,சினிமாவாலா சதீஷ், குரேஷி, ஆர் ஜே தீபக், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஆர். ஹரி இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எம் மோர்கன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி எம் மோர்கன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'அஸ்க்கு மச்சா அஸ்கு மச்சா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர்கள் தமிழ் ஆதவன் மற்றும் டி . எம்சி ஆகியோர் இணைந்து எழுத ,பின்னணி பாடகர் தமிழ் ஆதவன் பாடியிருக்கிறார். துள்ளல் இசை பாணியில் அமைந்துள்ள இந்த பாடலில் ஒலிக்குறிப்புக்கு ஏற்ப பொருள் தராத கேட்சிங்கான வார்த்தைகள் பாவிக்கப்பட்டிருப்பதால்.. ஒரு தரப்பு இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த பாடலில் நடிகை அஞ்சலி நாயரின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்தில் இலட்ச கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்றிருக்கிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM