தெஹிவளையில் இடம்பெற்ற கொடூர கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள பிரதான சந்தேக நபர்கள் இருவர் தொடர்பான முக்கிய தகவல்களைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை விரைவாகக் கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களது தந்தையின் கால் அகற்றப்பட்ட நிலையில், உயிரிழந்த சிறுவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றன.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு நிலையில், பல்வேறு தகவல்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் நிறத்தை மாற்றுவதற்காக, அதனைப் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஒப்படைத்த சந்தேக நபர் மற்றும் அந்தப் பணிமனையின் உரிமையாளர் ஆகிய இருவரை கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் இருக்கும் பிரபல குற்றவாளிகளான 'கொஸ்மல்லி' மற்றும் 'போதியவத்த அவிஸ்க' ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த முச்சக்கரவண்டியைச் செலுத்திய நபர் களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், 'கொஸ்மல்லி' என்பவரின் மாமாவைத் தேடி பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இதேவேளை, 'போதியவத்த அவிஸ்க' என்பவரின் இலங்கையில் உள்ள போதைப்பொருள் வலைப்பின்னலை வழிநடத்தி வந்த முக்கிய நபர் களுபோவில பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ 10 கிராம் 'ஐஸ்', 504 கிராம் ஹெரோயின், மின்னணுத் தராசு, 2 ரப்பர் முத்திரைகள் மற்றும் 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM