இன்றைய சூழலில் எம்மில் பலரும் நாளாந்தம் கடுமையாக உழைத்தாலும் வருவாய் என்பது எதிர்பார்த்த அளவிற்க்கு இல்லாமல் பற்றாக்குறையாகவே உள்ளது.
இதனால் தவிர்க்க முடியாத தருணங்களில் கடன் வாங்க வேண்டிய சூழலும் உருவாகிறது. இந்த கடன் ஒரு எல்லைக்கு மேல் செல்லும்போது... அதனை திருப்பி செலுத்த இயலாத அளவிற்கு சுமையாக மாறிவிடுகிறது. அத்துடன் பண பற்றாக்குறையும் ஏற்படுவதால் கடன் பிரச்சனையாக மாற்றம் பெறுகிறது.
இத்தகைய தருணங்களில் ஏதேனும் உபரி வருவாய் கிடைத்திடாதா..? என புதிய வருவாய்க்கான வழிகளை தேடத் தொடங்குகிறோம். ஆனால் அதற்கான வழிகள் புலப்படாமல் கடன் சுமை அழுத்தத்தை ஏற்படுத்தும். இது போன்ற தருணங்களில் கடன் பிரச்சனையை குறைத்துக் கொள்வதற்கும்... புதிய வருவாய் ஆதாரங்களுக்கான வழிவகைகளை உண்டாக்குவதற்கும்... எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக குறிப்புகளை வழங்கி உள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள்
- திருநீறு
- நெய் தீபம்
- டைமண்ட் கல்கண்டு
வியாழக்கிழமைகளில் மாலை வேளையில் அருகில் இருக்கும் ஜீவசமாதி அடைந்த சித்தர்களின் ஆலயத்திற்கு சென்று அங்கு அரை கிலோ அல்லது ஒரு கிலோ அளவிற்கு திருநீரை வாங்கி தானமாக அளித்துவிட்டு, அங்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி, 24 நிமிடங்கள் 'கடன் சுமை நீங்க வேண்டும்' என பிரார்த்திக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நிவேதனத்திற்காக டைமண்ட் கல்கண்டை சிறிய அளவிற்கு படைத்து, அதனை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கிட வேண்டும்.
இதனை வியாழக்கிழமை தோறும் தொடர்ச்சியாக செய்து வந்தால்.. அறிமுகம் மற்றும் அறிமுகமற்ற நபர்கள் மூலம் உபரி வருவாய்க்கான வழிவகை கிடைத்து, கடன் சுமை குறைவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM