இன்றைய திகதியில் எம்மில் பலரும் சில வகையினதான உணவுகளை பசியாறும் போது அவர்களுக்குள் ஒவ்வாமையை ஏற்படுத்தி எதிர்பாராத அசௌகரியங்களை உண்டாக்கும். இதனை தவிர்ப்பதற்காக ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளை துல்லியமாக அவதானிக்க மூன்று வகையினதான பிரத்யேக பரிசோதனை முறைகள் அறிமுகமாகி பலனளித்து வருகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் முதலில் இம்யூனோகுளோபுலின் E- IgE எனும் குருதி பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். இத்தகைய பரிசோதனை மூலம் ஒவ்வாமை , நாட்பட்ட தோல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு மண்டல பிரச்சனை, ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்று பாதிப்பு ஆகியவை குறித்த முடிவுகளை அறிந்து கொள்ள இயலும். ஆனால் இத்தகைய பரிசோதனை உங்களுடைய குருதியில் நோய் எதிர்ப்பு திறன் எவ்வளவு உள்ளது? என்பதை மட்டுமே அறிய இயலும். ஒவ்வாமை ஏற்படுவதற்கான அல்லது ஒவ்வாமையை உண்டாக்கும் காரணிகளை துல்லியமாக அவதானிக்க இயலாது.
இதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு ஸ்கின் பிரிக் டெஸ்ட்- Skin Prick Test எனும் பரிசோதனையை மேற்கொள்வர். இத்தகைய பரிசோதனை எம்முடைய முன் கை பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பரிசோதனையின் போது ஒவ்வாமையின் விளைவுகள் அதாவது ஒவ்வாமையை உண்டாக்கும் பூஞ்சை- பூச்சிகள்- மகரந்தம்- தூசிகள்- உணவு போன்ற பல்வேறு வகையினதான ஒவ்வாமைக்கான காரணிகளை கண்டறிய உதவுகிறது. இதன் மூலம் எதனை தொடுவதன் மூலமாகவோ... அல்லது எதனை சுவாசிப்பதன் மூலமாகவோ... அல்லது எதனை சாப்பிடுவதன் மூலமாகவோ ஒவ்வாமைக்கான அறிகுறிகளை உண்டாக்குகிறது என்பதை உறுதிப்படுத்த உதவி செய்கிறது. இத்தகைய பரிசோதனையின் போது முடிவுகள் தெரிய அரை மணி தியாலம் காத்திருக்க வேண்டும்.
ஆனால் ஒவ்வாமையை உண்டாக்கும் காரணியை துல்லியமாக அவதானிக்க காம்போனென்ட் ரிசால்வ்ட் டயகானஸ்டிக் - Component Resolved Diagnostic எனும் பிரத்யேக குருதி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இது ஒவ்வாமையை துல்லியமாக அவதானிக்கும் அதிநவீன குருதி பரிசோதனை முறையாகும். இத்தகைய பரிசோதனையின் மூலம் ஒவ்வாமையை தரும் உணவு பொருளை துல்லியமாக அவதானிக்க இயலும். அதாவது எந்த பிரத்யேகமான புரதம் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதனை கண்டறியப்படுவதுடன் உறுதிப்படுத்தவும் இயலுகிறது. இதன் மூலம் உணவு ப் பொருள்- சுற்றுச்சூழல்- என எத்தகைய காரணிகள் ஒவ்வாமையை உண்டாக்குகிறது என்பதனை துல்லியமாக அவதானிக்க இயலுகிறது. அத்துடன் எந்த வகையான உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்பதனையும் எடுத்துரைக்கிறது.
வைத்தியர் பிரசன்னா
தொகுப்பு அனுஷா



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM