தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா: முதல்வர் விஜய் புகழாரம்

Published By: Digital Desk 2

15 Sep, 2026 | 02:43 PM
image

'ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா'' என அவரது பிறந்த நாளில் தமிழகம் முதல்வர் விஜய் அவருடைய சமூக ஊடகப் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தமிழ் மண்ணில் திராவிட கலாச்சாரத்தை விதைத்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மக்கள் சேவையை நினைவு கூர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழக முதல்வரான விஜய் அவருடைய சமூக ஊடகத்தில் பதிவிட்டிருப்பதாவது,

'' தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும்.. கூர்மையான எழுத்தாற்றலாலும்.. மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவுடன் ஆட்சி பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக , அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா.

'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூக நீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும் தமிழின் பெருமையை காத்திடவும் இந்நாளில் உறுதி ஏற்போம்'' என பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39