செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்ற அச்சத்திற்கு மத்தியில், பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை வலியுறுத்தி ஸ்காட்லாந்தில் உள்ள 'டம்பிரீஸ் ஹவுஸ்' மாளிகையில் சர்வதேச உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவின் அரசர் மூன்றாம் சார்ள்ஸ் நடத்தும் இந்த உயர்மட்ட உச்சிமாநாட்டை 'டிட்ச்லி பவுண்டேஷன்' ஒருங்கிணைக்கிறது.
மனிதகுலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான Nvidia, OpenAI, Anthropic, IonQ மற்றும் Google DeepMind ஆகியவற்றின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தொழில்முனைவோர்களான ஆன்ந்த்ரோபிக் தலைமை நிர்வாகி டேரியோ அமோடை, ஓபன்ஏஐ தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்ஏஐ தலைமை நிர்வாகி ஈலான் மஸ்க் ஆகியோர் எல்லைக் கடந்து வளரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மொடல்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தன்னத்தானே சுய-மேம்பாடு செய்து கொள்வதால், கடந்த கோடைகாலத்திற்குப் பிறகு இத்தொழில்நுட்பம் கட்டுக்கடங்காத வேகத்தில் வளர்ந்து வருவதாக டேரியோ அமோடை எச்சரித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 'ஹக்கிங் ஃபேஸ்' (Hugging Face) தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முகவர்களின் திரள்கள், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் ஒட்டுமொத்த இணையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஆபத்து உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி மற்றும் அதனால் மனிதகுலத்திற்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அரசர் சார்லஸ் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவதால், இம்மாநாடு சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM