நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள் முதலில் தங்களைத் தாங்களே உணர்ந்துகொள்ள வேண்டும் – இதேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்

15 Sep, 2026 | 01:51 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள், கடந்த காலங்களில் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து அடையாள அட்டைகள், காதணிகள் மற்றும் சங்கிலிகளை எடுத்துச் சென்ற சம்பவங்கள் தொடர்பில் முதலில் தங்களைப் தாமே உணர்ந்துகொள்ள வேண்டும் என இதேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

பாராளுமன்றத்தில் ஒருவர் நாமல் ராஜபக்‌ஷ வைப் பார்த்து இந்தத் திருடனைப் பார்க்கும்போது எங்களுக்கு சிரிப்பு வருகின்றது, வெறுப்பு ஏற்படுகின்றது என்று கூறியதாக நான் பார்த்தேன்.

ஆனால், அவ்வாறு கூறுபவர்கள் முதலில் தங்களுடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். மக்களின் வீடுகளுக்குள் புகுந்து அடையாள அட்டைகளை எடுத்துச் சென்றவர்கள் யார்?

அப்பாவி தாய்மார்களின் காதணிகளையும் மக்களின் சங்கிலிகளையும் எடுத்துச் சென்றவர்கள் யார் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தங்களுடைய குறைகளை மறைத்துக்கொண்டு பிறருடைய குறைகளை மாத்திரம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று இன்று பிக்குகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஞான தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரைத் தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

நாட்டின் கௌரவத்துக்காகவும் பிக்குகளுக்காகவும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்துள்ளார். அவருக்கு எதிராக சுமார் 21 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

வரலாற்றில் நாட்டையும் பௌத்த சாசனத்தையும் பாதுகாத்தவர்கள் பிக்குகளே. வலாகம்பா மன்னனின் காலத்திலிருந்து சீகிரியா காசியப்ப மன்னன் வரையிலும், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலங்களிலும் பிக்குகள் நாட்டுக்காகவும் சாசனத்துக்காகவும் முன்னின்றுள்ளனர்.

வாரியபொல சுமங்கல தேரர் மற்றும் மிகட்டுவத்தே குணானந்த தேரர் இதற்கு சிறந்த உதாரணங்களாவர். ஆனால் இன்று மகாநாயக்க தேரர்கள் உட்பட பிக்குகள் அவமதிக்கப்படுகின்றனர். பௌத்த சாசனத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் போது அனைத்து பிக்குகளும் ஒன்றிணைய வேண்டும்.

அதற்காகவே பிக்கு முன்னணியை உருவாக்கியுள்ளோம். அனுராதபுர பேரணியில் மூன்று மாவட்டங்களில் இருந்து 400க்கும் அதிகமான பிக்குகள் கலந்து கொண்டனர். எனவே பிக்குகளின் உரிமைகளையும் நாட்டின் பாரம்பரியத்தையும் பௌத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் என இதேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13