இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் 10,000 வேலைவாய்ப்புகள் ; இரு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Published By: Digital Desk 2

15 Sep, 2026 | 01:12 PM
image

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையே இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்களின் கீழ் முதற்கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களை தாய்லாந்தில் பணியமர்த்துவதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழில் அமைச்சர் ஜூலபன் அமோர்ன்விவாட் ஆகியோர் குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு நடைமுறைகள், சட்டபூர்வ பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பில் முறையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், தாய்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெறும் இலங்கைத் தொழிலாளர்கள் விசா மற்றும் வேலை அனுமதிகளை சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்கான முறையான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் தாய்லாந்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47
news-image

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரின் 3.5...

2026-10-10 14:30:02