அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், நியூயோர்க் நகரில் உள்ள சிறுவயது வீடு 2 மில்லியன் டொலருக்கும் சற்று குறைவான விலைக்கு விற்பனையாகியுள்ளது.
குவீன்ஸ் பகுதியில் அமைந்துள்ள டியூடார் பாணியிலான இந்த வீட்டை 1940ஆம் ஆண்டில் ட்ரம்பின் தந்தை கட்டினார்.
2017இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் இந்த வீடு 2.14 மில்லியன் டொலருக்கு விற்பனையானதுடன், சுற்றுலாப் பயணிகளுக்காக Airbnb வாடகை வீடாகவும் குறுகிய காலம் பயன்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், 500,000 டொலர் செலவில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நியூயோர்க் நகரில் உள்ள ட்ரம்பின் சிறுவயது இல்லம் 2 மில்லியன் டொலருக்கும் சற்று குறைவான விலைக்கு தற்போது விற்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (11) அசோசியேட்டட் பிரஸ் (AP) மற்றும் நியூயோர்க் போஸ்ட் ஆகியவை வெளியிட்ட செய்திகளின்படி, ட்ரம்ப் தனது 4 வயது வரை வசித்த இந்த வீடு 1.93 மில்லியன் டொலருக்கு விற்பனையாகியுள்ளது.
குவீன்ஸின் ஜமைக்கா எஸ்டேட்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த டியூடார் பாணி வீடு, 1940இல் ட்ரம்பின் தந்தையும் ரியல் எஸ்டேட் நிறுவனருமான ஃபிரெட் ட்ரம்பால் கட்டப்பட்டது.
கடந்த ஜூலை மாதத்தில், பெயர் குறிப்பிடப்படாத ஒரு வாடிக்கையாளர் ஒப்பந்தம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, இந்த விற்பனைத் தொகை விபரம் வெளிவந்துள்ளது.
டாமி லின் (Tommy Lin) என்ற ரியல் எஸ்டேட் உருவாக்குநர் ஐந்து படுக்கையறைகள் மற்றும் மூன்று குளியலறைகள் கொண்ட இந்த வீட்டை கடந்த ஆண்டு 835,000 டொலருக்கு வாங்கினார். அதற்கு முன்பாக, இந்த வீடு பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. தண்ணீர்க்குழாய் வெடித்ததால் வீடு சேதமடைந்து பூஞ்சை பிடித்திருந்ததாகவும், வீட்டின் வளாகத்தில் தெருப் பூனைகள் இருந்ததாகவும் 'தி போஸ்ட்' செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (The Wall Street Journal) பத்திரிகைக்கு பேட்டியளித்த லின், இந்த வீடு மிகவும் பாழடைந்த நிலையில் இருந்ததாகக் கூறினார்.
"வீட்டில் தண்ணீரும் இல்லை, மின்சாரமும் இல்லை. அடித்தளத்தில் குழாய் வெடித்திருந்தது, கூரை முழுவதும் பூஞ்சை படர்ந்திருந்தது. அதில் மனிதர்கள் வசிக்கவே முடியாது" என்றும் லின் கூறினார்.
அதன் பிறகு எட்டு மாத காலத்தில் 500,000 டொலர் செலவில் லின் இந்த வீட்டைப் புதுப்பித்தார். புதுக்கப்பட்ட வீட்டில் சமையல் கலைஞர்களுக்கான நவீன சமையலறை (chef’s kitchen), ஹெரிங்போன் மரத் தளங்கள் மற்றும் ஸ்பா போன்ற குளியலறைகள் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளை மேலதிகமாக அமைத்திருப்பதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டது. தற்போது அந்த வீடே பெயர் வெளியிடப்படாத இன்னொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM