லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனொருவன் திடீரென உயிரிழந்த சம்பவத்தால் குறித்த கிராமமே தீபாவளிதினத்தன்று சோகத்தில் ஆழ்ந்தது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுவன்  நேற்று மாலை தீபாவளியை முன்னிட்டு மட்டுக்கலை பகுதியில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்த இடத்தில் நின்று கொண்டிருந்த குறித்த சிறுவன்  மயக்கமுற்றதையடுத்து, அங்கிருந்தவர்களால் லிந்துல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 

குறித்த சிறுவன்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக சிறுவனின் பெற்றோர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சடலமானது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துல வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார். 

சம்பவத்தில் இறந்தவர்  9 வயதுடைய முத்துக்குமார் சஜீவன் ஆவார். இச்ச ம்பவம் றேற்றிரவு 8 மணியளவில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.