(க.சிவலிங்கமூர்த்தி)
தித்வா அனர்த்த நட்ட ஈட்டு வேலைத்திட்டம் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள கொலொன்னாவை தொகுதியில் தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலை உபகரணத் தொகுதிகளை வழங்கும் விசேட நிகழ்வு திங்கட்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் சிரேஷ்ட உப தலைவர் ஜகத் அபேசிங்க, பணிப்பாளர் குமாரி கொத்தலாவல, இளைஞர் விவகார செயலாளர் நவிது ரத்நாயக்க, கொழும்பு மாவட்ட இணைப்பாளர் ருக்ஷான் பீரிஸ், கொலொன்னாவை பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா, கோதட்டுவ மகா வித்தியாலயத்தின் அதிபர் சுஜீவா பிரியதர்சனி பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பிரதி அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
தேசிய மட்டத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, இதுவரை தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 பாடசாலைகளைச் சேர்ந்த 4300 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.
கொலொன்னாவை பிரதேச செயலாளர் அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தித்வா அனர்த்த நிவாரண வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் அனுசரணையுடன் கொலொன்னாவை தொகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான விசேட பாடசாலை உபகரண வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கோதட்டுவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 106 பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தித்வா நட்ட ஈட்டு வேலைத்திட்டத்தின் கீழ் கொலொன்னாவை தொகுதியைச் சேர்ந்த குடும்பங்களுக்காக 15,000 ரூபாய், 25,000 ரூபாய் மற்றும் 50,000 ரூபாய் பெறுமதிகளின் கீழ் நலன்புரித் கொடுப்பனவுகள் வழங்குதல் ஏற்கனவே முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு 500,000 ரூபாய் நட்ட ஈடு வழங்கும் திட்டத்தின் கீழ் அதன் முதல் தவணையாக 15,000 குடும்பங்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான நட்ட ஈடுகள், வியாபார நிலையங்களுக்கான நட்ட ஈடுகள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் புனரமைப்பு என்பன உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் முழுமையாக உள்ளடக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்களுக்கு ஏற்ப தித்வா அனர்த்த நட்ட ஈட்டு வேலைத்திட்டம் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM