சுப்பர் சிக்ஸில் விளையாட  புளூ ஸ்டார்  கடைசி அணியாக தகுதிபெற்றது 

Published By: Vishnu

14 Sep, 2026 | 10:08 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கான வெளியேற்ற வாயிலில் இருந்த நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகம் தனது கடைசி லீக் போட்டியில் ரட்னம் கழகத்தை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட கடைசி அணியாக தகுதிபெற்றுக்கொண்டது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (14) மாலை நடைபெற்ற இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியில் புளூ ஸ்டார் கழகம் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியின் இரண்டாவது பகுதியில் 19 நிமிடங்கள் எஞ்சி இருந்தபோது கடும் மின்னல் காரணமாக பிற்பகல் 5.05 மணியவில் ஆட்டத்தை மத்தியஸ்தர் லக்மால் வீரக்கொடி இடைநிறுத்தினார்.

ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது புளூ ஸ்டார் கழகம் 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

சுமார் 20 நிமிடங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடரப்பட்டதுடன் கடைசி 8 நிமிடங்கள் அரை வெளிச்சதில் விளையாடப்பட்டு நிறைவுக்கு வந்தது.

சுப்பர் சிக்ஸில் விளையாட தகுதிபெறுவதற்கு வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடிய புளூ ஸ்டார் கழகத்தை 14ஆவது நிமிடத்தில் ரட்னம் கழகம் கோல் போட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த கோலை மொஹமத் ஷரீக் போட்டார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் கோல் வாய்ப்புகளைத் தவறவிட்ட வண்ணம் இருந்தன.

எவ்வாறாயினும் இடைவேளைக்கு 5 நிமிடங்கள் இருந்தபோது மொஹமத் இஜாஸ் கோல் நிலையை சமப்படுத்தி புளூ ஸ்டார் கழகத்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

இடைவேளைக்குப் பின்னரும் இரண்டு அணியினரும் ஏகப்பட்ட கோல்களைத் தவறவிட்டனர்.

இதனிடையே ரட்னம் கழகத்திற்காக விளையாடும் யாழ். மத்திய கல்லூரி மற்றும் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் முன்னாள் கோல்காப்பாளர் தெய்வேந்திரா மேவின்ஷான் மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு கோல்களைத் தடுத்து பெரும் பாராட்டைப் பெற்றார்.

இந்த சுற்றுப் போட்டியில் மேவின்ஷான் 30க்கும்  மேற்பட்ட கோல்களைத் தடுத்து நிறுத்தி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் கழகத்திற்கு கிடைத்த பெனல்டியை அவ்தவ் ப்ரான்கி கோலினுள் புகுத்தினார்.

போட்டி முடிவடைய சில செக்கன்கள் இருந்தபோது ப்ரான்கி தலையால் முட்டி தனது இரண்டாவது கோலைப் போட்டு புளூ ஸ்டார் கழகத்தின் கோல் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார்.

இந்தப் போட்டி முடிவுடன் அப்கன்ட்றி லயன்ஸ் (27 புள்ளிகள்), கலம்போ எவ்சி (16 புள்ளிகள்), சீ ஹோக்ஸ் (15 புள்ளிகள்), றினோன் (15 புள்ளிகள்), ரெட் ஸ்டார் (15 புள்ளிகள்), புளூ ஸ்டார் (13 புள்ளிகள்) ஆகிய ஆறு கழகங்கள் சுப்பர் சிக்ஸில் விளையாடவுள்ளன.

அக்டோபர் முதலாவது வாரத்தில் சுப்பர் சிக்ஸ் சுற்று ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புளூ ஸ்டாரின் கடும் சவாலுக்கு மத்தியில்...

2026-10-11 21:02:58
news-image

றினோன் கழகத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது...

2026-10-11 16:06:32
news-image

பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது...

2026-10-11 15:29:57
news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22