உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்ந்தும் திட்டங்கள் தயாரித்து வருவதென தெரிவிக்காமல் தற்போது  திட்டங்களை செயற்படுத்த வேண்டும் - சுனில் வட்டகல

14 Sep, 2026 | 07:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தில் இருக்கும் மக்கள்  பிரதிநிதிகள் யாருக்கு எதிராகவும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு தெரிவிக்க முடியாத வகையில் புதிய திருப்புமுனையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்ந்தும் திட்டங்கள் தயாரித்து வருவதென தெரிவிக்காமல் தற்போது திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற வாரத்தை முன்னிட்டு இன்று (14) மகரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாாங்கம் ஆட்சிக்கு வந்து தற்போது இரண்டு வருடங்கள் ஆகின்றன. அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் நாங்கள் மக்களுக்கு அளித்த  வாக்குறுதிகளில், அரசாங்கம் அமைப்பதில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தோம். அதன் பிரகாரம் மக்களை இணைத்துக்கொண்ட ஆட்சி முறையை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். 

ஆட்சி அமைத்து இரண்டு வருடங்களில்  மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய மக்களிடம் செல்வதாக நாாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம்.

அதன் பிரகாரமே ஜனாதிபதி தற்போது மாவட்ட மட்டத்தில் கூட்டங்களை நடத்தி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களையும் தெரிவித்து வருகிறார். அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று, அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம சேவகர் மட்டத்தில் கூட்டங்களை நடத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்களை அமைத்து தற்போது குறிப்பிடத்தக்கதொரு காலம் கடந்துவிட்டது. அதனால் உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் மக்களுக்கு சேவையாற்ற, இன்னும் திட்டங்கள் அமைத்து வருவதாக தெரிவித்துக்கொண்டிருக்காமல், தற்போது  திட்டங்களை செயற்படுத்தி, மக்களுக்கு முடிந்த சேவைகளை வழங்க வேண்டும். 

அதேநேரம்  அனைத்து சேவைகளையும் டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதுடன் அதற்காக பாரியளவில் செலவிட்டு வருகிறது. டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எவ்வாறு மோசடிகளை ஒழிப்பது என்றே நாங்கள் சிந்தித்து வருகிறோம்.

ஏனெனில் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கே மக்கள் எமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் நாங்கள் 259 பேர் இருக்கிறோம் அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்கள் 3ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். இவர்கள் யாரும் எந்த மோசடியிலும் ஈடுபட்டதாக அரசியல் அதிகாரிகள் யாருக்கும் விரல் நீட்ட முடியாத நிலைக்கு நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். இது இரண்டு வருட காலத்தில் எமது அரசாங்கம் பெற்றுக்கொண்டிருக்கும் பெரிய வெற்றியாகும். அதனால் தேசிய மக்கள் சக்தியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் யாரும் ஊழல் மோசடிகளுக்காக அரச அதிகாரிகள் யாரையும் தூண்டுவதும் இல்லை. அதற்காக அழைப்பதும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி...

2026-10-11 22:10:31
news-image

மூத்த அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம்...

2026-10-11 22:06:19
news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13