இயந்திரமொன்று பெண்ணின் கைக்கு மெஹந்தி டிசைன் போடும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) அறிமுகம் பல துறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கைவினைஞர்கள் மற்றும் பாரம்பரிய கலைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் இயந்திரங்கள் சவாலாக மாறத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா (Harsh Goenka) தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு பெண் தனது கையை ஒரு நவீன இயந்திரத்துக்குள் வைக்கிறார். அந்த இயந்திரம் சில வினாடிகளிலேயே மிகவும் துல்லியமாகவும் அழகாகவும் அவரது கையில் மெஹந்தி டிசைனை வரைகிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த ஹர்ஷ் கோயங்கா, "இன்னும் சில வேலைகள் கைவிட்டுப் போயின..." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
திருமணங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் மெஹந்தி வைத்துப் பிழைப்பு நடத்தும் பல எளிய கலைஞர்களின் வாழ்வாதாரம் இந்த தானியங்கி இயந்திரங்களால் பாதிக்கப்படும் என சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் கைவண்ணத்தில் இருக்கும் நுணுக்கத்தையும், அந்த உணர்வையும் ஒருபோதும் இயந்திரங்களால் ஈடுசெய்ய முடியாது என்றும் ஊசி போன்ற இயந்திர பாகங்களுக்கு பயந்து பெண்கள் தங்களது கைகளை இதில் வைக்க மாட்டார்கள். அதனால் மெஹந்தி கலைஞர்களின் பணி பாதுகாப்பாகவே இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை, இந்த வீடியோ நிஜமான இயந்திரம் அல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோவாக (AI-generated) இருக்கக்கூடும் என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இயந்திரங்கள் எவ்வளவு அதிவேகமாக வளர்ந்தாலும், கலை சார்ந்த விடயங்களில் 'மனித தொடுதல்' (Human Touch) தான் முதன்மையானது என்பதை இந்த விவாதம் மீண்டும் நிரூபித்துள்ளது என்றும் பலரால் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM