சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன

14 Sep, 2026 | 04:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிதல்ல, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.தற்போதைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில்  சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றுப்பட வேண்டும்.அதுவே அனைவருக்கும் பாதுகாப்பாக அமையும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

வெலிகட சிறைச்சாலையில் விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிதல்ல, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.ஆகவே சிறைக்கு அனுப்புவதால் ஒன்றும் அவர் அச்சமடைய போவதில்லை.

மஹிந்த வேண்டாம் என்று குறிப்பிட்டுக் கொண்டு ரணில் விக்கிரமசிங்க பக்கம் செல்லவில்லை. பொருளாதார ரீதியில் நாடு பாதிக்கப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை பொறுப்பேற்றார். குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை பாதுகாத்தார்.

பொதுஜன பெரமுனவுக்கும், எமக்கும் இடையில் கடந்த காலங்களில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டது. அதற்காக நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஒன்றிணையாமல் இருக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷவுக்காகவே மீண்டும் ஒன்றிணைந்துள்ளோம்.

தற்போதைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில்  சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றுப்பட வேண்டும்.அதுவே அனைவருக்கும் பாதுகாப்பாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40
news-image

எரிபொருள் விநியோக நெருக்கடி: நாடளாவிய ரீதியில்...

2026-10-11 15:24:39