(இராஜதுரை ஹஷான்)
உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இம்மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி,துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்ளூர் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது.தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து குறைந்த விலைக்கு எரிபொருளை விநியோகிப்பது சவாலானது என சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு பல காரணிகள் காணப்படுகின்றன. கடந்த காலங்களைப் போல அரசாங்கம் தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது விலைகள் குறித்து ஒரு முடிவுக்கு வருவது போன்ற பல வழிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு குறித்து தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்திருந்தாலும், நுகர்வோரையும் கவனத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும்.ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படுவதைப் போல, தற்போதைய நிலவரங்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு இந்த மாத இறுதியிலும் அதற்குரிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
போதுமான எரிபொருள் தொகை கையிருப்பில் உள்ளன. ஆகவே எக்காரணிகளுக்காகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. எரிபொருள் விநியோகஸ்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM