இளவரசி டயானாவின் புகழ்பெற்ற ‘பழிவாங்கும் ஆடை’ டிசம்பரில் ஏலம்

14 Sep, 2026 | 04:37 PM
image

பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானா அணிந்து உலகளவில் பெரும் பேசுபொருளான புகழ்பெற்ற கறுப்பு நிற ஆடை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1994ஆம் ஆண்டு, அப்போதைய சார்ள்ஸ் இளவரசருக்கும் கமிலா பார்க்கர் போவுல்ஸுக்கும் இடையே திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருந்ததாக சார்ள்ஸ் இளவரசர் தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இளவரசி டயானா மனமுடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.

இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே, லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் டயானா தோள்பட்டை இல்லாத கறுப்பு நிற ஆடையை அணிந்து கலந்துகொண்டார்.

1994ஆம் ஆண்டு லண்டனிலுள்ள சர்பென்டைன் கலைக்கூடத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில், கிரேக்க ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டினா ஸ்டாம்போலியன் வடிவமைத்திருந்த இந்த ஆடையை டயானா அணிந்திருந்தார்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் பாரம்பரிய ஆடை விதிகளிலிருந்து மாறுபட்ட வகையில், தோள்பட்டை மற்றும் முழங்காலுக்கு மேல் பகுதி வெளிப்படும் வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது.

டயானாவின் இந்தத் துணிச்சலான தோற்றம், அரச குடும்பத்தின் பாரம்பரிய கட்டுப்பாடுகளுக்கு அப்பால் அவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திய தருணமாகப் பார்க்கப்பட்டது. இதனால் சர்வதேச ஊடகங்கள் இந்த ஆடையை ‘பழிவாங்கும் ஆடை’ (Revenge Dress) என வர்ணித்தன.

இந்நிலையில், சர்வதேச ஏல நிறுவனமான சோதபீஸ் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி இந்தப் புகழ்பெற்ற ஆடையை ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளது.

இந்த ஆடை சுமார் 300,000 அமெரிக்க டொலர்கள் அல்லது 220,000 பவுண்டுகள் வரை விலைக்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசி டயானா தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் தனது 79 ஆடைகளை ஏலத்தில் விட்டதைத் தொடர்ந்து, 1997ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆடை ஏலத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும் என சோதபீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ஆடைகள் ஒரு சக்திவாய்ந்த மொழியாகச் செயற்பட முடியும் என்பதை இளவரசி டயானா இயல்பாகவே உணர்ந்திருந்தார்” என சோதபீஸ் நிறுவனத்தின் சர்வதேச ஆடைப் பிரிவுத் தலைவர் மோர்கன் ஹலிமி தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையின் சவாலான காலகட்டத்தில் ஆடை மூலம் டயானா வெளிப்படுத்திய துணிச்சலும் மாறுபட்ட அணுகுமுறையும், அவரது தனித்துவத்தை எடுத்துக்காட்டும் முக்கிய தருணமாகப் பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விடாமுயற்சிக்கு வயது தடையில்லை: 5 மணி...

2026-10-12 14:10:55
news-image

இன்று வானில் தென்படும் சனியின் ‘எதிர்நிலை...

2026-10-04 16:14:53
news-image

டோக்கியோவில் கலக்கிய ‘பவள மல்லி’: ஜப்பானியர்களிடையே...

2026-10-03 17:55:05
news-image

“Back to the 80s” ட்ரெண்டில்...

2026-09-17 14:52:19
news-image

ரணில் ராஜபக்சக்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்...

2026-09-14 16:05:42
news-image

இளவரசி டயானாவின் புகழ்பெற்ற ‘பழிவாங்கும் ஆடை’...

2026-09-14 16:37:11
news-image

கியூபாவில் நடனமாடி இணையத்தைக் கலக்கும் 70...

2026-08-28 12:57:11
news-image

360 தொன் எடையுள்ள பிரம்மாண்டக் கோட்டையை...

2026-08-26 16:27:14
news-image

உசைன் போல்ட்டை மிஞ்சிய சீனாவின் மனித...

2026-08-24 11:24:33
news-image

தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின்...

2026-08-24 12:20:32
news-image

2,000 ட்ரோன்கள்... ஒரு காதல் கதை!...

2026-08-22 15:48:35
news-image

ஐரோப்பாவில் மிக உயரமான மேரி மாதா...

2026-08-20 12:15:47