(எம்.ஆர்.எம்.வசீம்)
கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்துக்கு உரித்தான பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டிக்கும் அனைத்து கட்டிடங்களும் சட்டவிராேதமானதாகும். அதனால் அவற்றை அகற்றுவதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
காலிமுகத்திடலில் இருந்து கங்கொட ஓயா வரையில் உள்ள சட்டவிராே கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை கடந்த வாரத்தில் இருந்து ஆரம்பித்திருக்கிறது. இந்த வலயத்தில் கடலில் இருந்து 10 மீட்டர் வரையான இடம் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்துக்கு உரித்தானதாகும். இந்த எல்லைப்பகுதிக்குள் எந்தவகையான கட்டிடங்களுக்கும் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அதேபோன்று இந்த பிரதேசத்தில் இருக்கும் கடற்கரைக்கு நுழையும் பாதைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் இந்த வலயத்துக்குள் பொது மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த கடற்கரையை கண்டுகளிப்பதற்கு ஏதாவது இடையூறுகள் இருக்குமானால் அவற்றையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அரசாங்கம் என்றவகையில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட ரீதியிலே நாங்கள் மேற்கொள்கிறோம். இதற்கு தேவையான தடைநீக்கல் அனுமதிகளை சட்டமா அதிபரிடம் பெற்றுக்கொண்டே மேற்கொள்கிறோம்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் யாருக்காவது அநீதி அல்லது இடையூறுகள் ஏற்படுவதாக நினைத்தால், அவர்களுக்கு அது தொடர்பில் நீதிமன்றம் செல்வதற்கு சகல உரிமைகளும் இருக்கின்றன.
இவ்வாறு சட்ட விராேத கட்டிடங்களை கடலோரங்களில் இருந்து அகற்றுவதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் எமது நாட்டு மக்களுக்கு கடற்கரையை கண்டுகளிப்பதற்கான சிறந்ததொரு நிலைமை ஏற்படும் என நம்புகிறோம் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM