மக்கள் பங்கேற்புடன் வெளிப்படையான புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர்

14 Sep, 2026 | 03:45 PM
image

(செ.கவிஷனா)

அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில் நிலைநிறுத்தியுள்ளதுடன், அரச அதிகாரிகள், பிரதிநிதிகள் மீது மக்கள் விரல் சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில் நிலைநிறுத்தியுள்ளது. கடந்த கால ஆட்சி முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நாட்டின் சாதாரண மக்களையும் நிர்வாக கட்டமைப்போடு நேரடியாக இணைக்கும் வகையில் மக்கள் பங்கேற்புடனான ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகளை வழங்குவதற்காக அரசியல் தலைமைத்துவம் நேரடியாகவே மக்களிடம் செல்லும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஜனாதிபதி நேரடியாகப் புலத்சிங்கள, பேருவளை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து மக்களின் நிலைமைகளைக் கண்டறிந்துள்ளார்.

இதேபோன்று, ஜனாதிபதி மாவட்ட மட்டத்திலும், அமைச்சர்கள் தொகுதி மட்டத்திலும், நகரசபைத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வரையிலும் நேரடியாகச் சென்று மக்களையும் அரச அதிகாரிகளையும் சந்தித்துப் பணியாற்றி வருகின்றனர். இது ஒரு சங்கிலித் தொடர் போன்ற கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சிக் காலங்களில் நிலவிய ஊழல், இலஞ்சம் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதே இந்த அரசாங்கத்தை மக்கள் தோற்றுவித்ததன் முதன்மை நோக்கமாகும். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், தற்போதுள்ள 159 பாராளுமன்றப் உறுப்பினர்களோ அல்லது நாடு முழுவதும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளோ எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. மக்கள் பிரதிநிதிகள் மீது விரல் சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல்வாதிகள் எவரும் ஊழல் சார்ந்த செயல்களுக்கு அரச அதிகாரிகளையோ அல்லது பொதுமக்களையோ தூண்டப்போவதில்லை என்பதால், அரச அதிகாரிகள் எவ்வித அச்சமுமின்றி தைரியமாக நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற முடியும். மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கைகோர்த்துப் பணியாற்றுவதற்கு இதுவொரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13