ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உப ரத்தின கல்

Published By: Digital Desk 2

14 Sep, 2026 | 03:44 PM
image

எம்மில் பலரும் தங்களுடைய ராசிக்கு ஏற்ற வகையில் நவரத்தின கற்களை மோதிரமாகவோ,  கழுத்தில் அணியும் செயினாகவோ,  பிரேஸ்லெட்டாகவோ,  ஏதேனும் ஒரு வகையினதான ஆபரணமாக அணிவதுண்டு. 

அதே தருணத்தில் சிலர் தங்களுடைய யோகி மற்றும் அவ யோகியை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ற வகையில் நவரத்தின கற்களுடன் உப ரத்தின கல்லையும் பாவிப்பதுண்டு.

இந்த உப ரத்தின கற்களில் ஒவ்வொரு வகையினதான கற்களுக்கும் பிரத்யேக பலனை வழங்கும் ஆற்றல் உண்டு.

இந்நிலையில் ஆரோக்கியத்திற்காக குறிப்பாக வயிறு சார்ந்த செரிமான மண்டலத்தின் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்காக பிரத்யேக உபரத்தின கல் இருக்கிறது என்றும், இதனை பாவித்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல செல்வமும், சொத்தும் பன்மடங்கு உயரும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய ஆற்றல் படைத்த உப ரத்தின கல் தான் சிற்றின் (CITRINE).

 இந்த உப ரத்தின கல்லில் அசலானவற்றை அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மூலமாகவோ அல்லது வழிகாட்டுதலுடனோ தெரிவு செய்து, வியாழக்கிழமைகளில் ஆபரணங்களாக தயாரித்து அணிந்து கொண்டால், உங்களுடைய வீட்டில் அல்லது உங்களது தொழிலில் வளர்ச்சி என்பது எதிர்பாராததாக ஏற்பட்டு, செல்வ செழிப்பு மேலோங்கும். 

அதே தருணத்தில் உங்களுடைய ஆரோக்கியமும் மேம்படும். இந்த சிற்றின் எனும் உப ரத்தின கல்  நவகிரகங்களில் குருவை குறிப்பதால், உங்களுக்கு குரு பகவான் யோகியாக இருந்தால்... இதனை அணிந்து கொண்டால் ஆயுள் முழுவதும் செல்வமும், ஆரோக்கியமும் நீடிக்கும். 

அதே தருணத்தில் உங்களுடைய ஜாதகத்தில் குரு பகவான் அவயோகியாக இருந்தால்.. அதற்குரிய பரிகாரங்களை செய்த பிறகு, இந்த உபரத்தின கல்லை அணிந்தால், குருவின் பரிபூரண ஆசி கிடைத்து வாழ்க்கையில் செல்வ வளத்தை பெறுவீர்.

குரு என்றாலே பெரும் தனம். அதனால்  வணிகர்கள், மில்லியன் கணக்கிலான ரூபாயில் வரவு செலவுகளை மேற்கொள்ளும் வணிகர்கள், இந்த கல்லை அணிந்தாலோ அல்லது உங்களுடைய விற்பனை நிலையத்தில் இடம்பெறச் செய்தாலோ தொழில் சிறக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்ம வினையிலிருந்து நீங்குவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-16 14:22:48
news-image

நினைத்ததை சாதிப்பதற்கான எளிய வழிமுறை..!?

2026-10-15 13:42:30
news-image

வாழ்க்கையில் வளர்ச்சியை உண்டாக்கும் தானங்கள்...!?

2026-10-14 14:21:20
news-image

பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரே...

2026-10-13 15:58:57
news-image

கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடு...

2026-10-12 13:50:15
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை

2026-10-10 17:17:58
news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39