மைக்சுரிஷன் சின்கோப் எனும் திடீரென்று ஏற்படும் மயக்கப் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

14 Sep, 2026 | 03:28 PM
image

இன்றைய சூழலில் நீரிழிவு பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரையை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

வேறு சிலருக்கு இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்கும் போது அவர்களுடைய ரத்த அழுத்தத்தில் சம சீரற்ற நிலை ஏற்படுவதால் திடீரென்று மயக்கம் ஏற்படும்.

இதனால் விவரிக்க இயலாத அல்லது எதிர்பார்க்காத பாரிய விளைவுகள் உண்டாகும். இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் மைக்சுரிஷன் சின்கோப் என வகைப்படுத்தப்பட்டு, அதற்கான பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு, நிவாரணம் தரப்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

தலைசுற்றல், கண் இருட்டடிப்பு, பலவீனம், வியர்வை போன்ற அறிகுறிகளுடன் இரவு நேரத்திலோ அல்லது அதிகாலையிலோ படுக்கையில் இருந்து எழுந்து சிறுநீர் கழிக்கும் போது அவர்களின் குருதி அழுத்தத்தில் பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் உண்டாகிறது.

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் ரத்த அழுத்த குறைவின் காரணமாக மூளைக்கு செல்ல வேண்டிய குருதி ஓட்டம் இயல்பான அளவைவிட குறைகிறது. இதனால் வேகல் நரம்பு எனும் நரம்பு மண்டலம் இயல்பை விட அதிக அளவிற்கு தூண்டப்பட்டு, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறைவதால் மயக்கம் ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

மது அருந்தும் பழக்கம், நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, அதீதப் பசி, சில பிரத்யேக மருத்துவ நிலைகள், சிறுநீர் மெதுவாகவும் நீண்ட நேரமாகவும் கழிப்பது என பல்வேறு காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

பெரும்பாலும் இத்தகைய பாதிப்பு தற்காலிகமானது தான் என்றாலும், இதற்கு உரிய தருணத்தில் முறையான மற்றும் முழுமையான நிவாரண சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் சிறுநீர் பரிசோதனை, குருதி பரிசோதனை, ரத்த சக்கரை அளவு தொடர்பான முழு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, அதற்குரிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி இதற்கு முழுமையான நிவாரணத்தை அளிப்பார்கள்.

வைத்தியர் சதீஷ்குமார்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விழித்திரை பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-10-16 14:17:33
news-image

அர்ட்டிகேரியா எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-10-15 14:25:51
news-image

சிஸ்டிக் பாராதைரொய்ட் அடினோமா எனும் பாதிப்பிற்குரிய...

2026-10-14 15:03:15
news-image

இடுப்பு மறுசீரமைப்பு சத்திர சிகிச்சை

2026-10-13 17:31:05
news-image

ஒஸ்டியோட் ஒஸ்டியோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-10-12 13:59:47
news-image

இதய நோயாளிகளுக்கு நிவாரணம் தரும் நவீன...

2026-10-10 17:17:40
news-image

உலக மனநல தினம் இன்று

2026-10-10 16:59:52
news-image

நான் கேரியஸ் லீஸன்ஸ் எனும் பற்களில்...

2026-10-09 14:31:07
news-image

டெஸ்டிகுலர் டோர்ஷன் எனும் விதைப் பையில்...

2026-10-08 17:25:50
news-image

பீடியாட்ரிக் ஓர்தோபீடிக் கிளப்ஃபுட் எனும் பிறவி...

2026-10-07 16:28:17
news-image

செல்லுலிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-10-06 15:58:41
news-image

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி கண் பாதிப்பு...

2026-10-05 12:16:44