12,000 வலம்புரி சங்குகள் முதல் மணல் சிற்பம் வரை விநாயகருக்கு பிரம்மாண்டமான அலங்காரங்கள்

Published By: P. Saranya

14 Sep, 2026 | 03:43 PM
image

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார நாளான விநாயகர் சதுர்த்தி இன்று (14) திங்கட்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, இந்தியாவின் தமிழ்நாட்டில் பல்வேறு விநாயகர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரம்மாண்ட அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை கொளத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 40 அடி உயரத்தில் பிரம்மாண்ட பிள்ளையார் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 12,000 வலம்புரி சங்குகள் மற்றும் 2,000 சிப்பிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கோவை மாவட்டம் புலியகுளத்தில் அமைந்துள்ள முந்தி விநாயகர் ஆலயத்திலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் இன்று அதிகாலை முதல் நடைபெற்றுள்ளன.

ஆசியாவிலேயே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலை புலியகுளம் முந்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ளது. 190 தொன் எடையுடன், 19 அடி உயரமும் 10 அடி அகலமும் கொண்ட இந்த விநாயகர் சிலை கம்பீரமாகக் காட்சியளித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 02 தொன் மலர்கள் மற்றும் 50 கிலோ சந்தனக் காப்பு கொண்டு முந்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

இதேவேளை, மும்பையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பஞ்சமுகி விநாயகர் உருவாக்கியுள்ளார். 

சென்னை பெரம்பூர் பகுதியில் வஸ்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விநாயகர் சிலையை உருவாக்குவதற்காக 300 புடவைகள், 250 வேஷ்டிகள் மற்றும் 250 துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னை பகுதியில் 751 கிலோ அன்னாசிப் பழங்களைப் பயன்படுத்தி 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொளத்தூர் பகுதியில் கண் திருஷ்டி தகடுகளைப் பயன்படுத்தி 42 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலையும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதானி சீமேந்து நிறுவனத்தின் வியக்கவைக்கும் துர்கா...

2026-10-12 16:32:57
news-image

இன்று மகாளய அமாவாசை

2026-10-10 13:34:02
news-image

காரைநகரில் சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டுப் பெருவிழா

2026-09-23 17:24:25
news-image

கொட்டும் மழையில் கொட்டகலை வாவியில் 17...

2026-09-21 15:49:12
news-image

17 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை மீனாட்சி...

2026-09-17 11:47:34
news-image

12,000 வலம்புரி சங்குகள் முதல் மணல்...

2026-09-14 15:43:34
news-image

பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2026-09-08 10:11:49
news-image

இசையும் நடனமும் சங்கமித்த "வானவில்" :...

2026-08-31 15:33:32
news-image

முன்னோர்கள் ஆசிர்வதிக்கும் ஆடி அமாவாசை விரதம்

2026-08-12 12:15:37
news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12
news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06