சின்னத்திரை பிரபல நடிகர் சித்து கதையின் நாயகனாக குற்றத்தை புலனாய்வு செய்யும் காவல்துறை விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் நாட்டார் கதையை தழுவி முழு நீள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தில் 'பிக் பொஸ்' சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல. ராமமூர்த்தி, 'நிழல்கள்' ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்யா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி. கே. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோதை எண்டர்டெயின்மென்ட் மற்றும் எம் எஸ் சுவிஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என உறுதிப்பட தெரிவித்திருக்கும் இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந் நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழக மக்களிடம் வழக்கில் உள்ள நாட்டார் கதையை மையமாக வைத்து, முழு நீள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்புடன் திரைக்கதை விறுவிறுப்புடன் நகரும்.
கொலையின் பின்னணி குறித்து விசாரணைக்கும் காவல்துறை அதிகாரியின் நகர்வுகள்.... அவர் எதிர்கொள்ளும் அமானுஷ்யமான சவால்கள்... ஆகியவை ரசிகர்களுக்கு வித்தியாசமான பட மாளிகை அனுபவத்தை வழங்கும்'' என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM