லெனின் பாண்டியன்' சமூகத்திற்கு தேவையான வலிமையான படைப்பு

Published By: Digital Desk 2

14 Sep, 2026 | 03:17 PM
image

அறிமுக நடிகர் தர்ஷன் கணேசன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

புதுமுக இயக்குநர் டி. டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தில் கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், ஸ்ரிதா ராவ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஏ. எம். எட்வின் சகாய் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா இசையமைத்திருக்கிறார். காவலர்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், டி. சிவா, சுஜாதா விஜயகுமார், விநியோகஸ்தர் அருள்பதி, இயக்குநர்கள் பி. வாசு, பத்ரி, கண்ணன், வெங்கட் பிரபு ,நடிகர் ராம்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்ட கதை. 75 வயது முதியவர் ஒருவர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இருப்பதன் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பி, அதற்கு ஏற்ற வகையில் படத்தில் திரைக்கதை பயணிக்கும். இப்படத்தில் சமூகத்திற்கு தேவையான வலிமையான ஒரு விடயத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெப்போலியன் நடிக்கும் 'அமெரிக்க ஆவி' படத்தின்...

2026-10-12 15:40:04
news-image

நடிகர் அருண் கார்த்தி நடிக்கும் 'பனி...

2026-10-12 15:26:41
news-image

தமிழக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட நடிகர்...

2026-10-12 15:13:42
news-image

மனிதர்களின் நிறம் சார்ந்த அரசியலை பேசும்...

2026-10-12 15:03:04
news-image

நவம்பரில் வெளியாகும் சோசியல் திரில்லரான 'ஜெடூசி'

2026-10-12 14:56:50
news-image

ராப் பாடகர் பால் டப்பா நடிகராக...

2026-10-12 14:53:54
news-image

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் ஆகாஷ் பிரேம்குமார்...

2026-10-12 14:51:58
news-image

இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்த...

2026-10-12 14:39:13
news-image

சூர்யாவுடன் மோதும் விஜய் அண்டனி

2026-10-12 14:43:06
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபலி' படத்தின்...

2026-10-12 14:32:49
news-image

சிலம்பரசன் டி. ஆர். வெளியிட்ட லியோசிவகுமாரின்...

2026-10-12 14:29:47
news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22