தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா கதையின் நாயகியாக மூக்குத்தி அம்மனாக நடித்திருக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசரான 'மகா சக்தி' வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இத்திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2 ' திரைப்படத்தில் நயன்தாரா, துனியா விஜய், ஊர்வசி, யோகி பாபு, 'மைனா' நந்தினி, 'கருடா' ராம், அபிநயா, சிங்கம் புலி, சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா, வி. ஆர். சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார்.
ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி. கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர், குஸ்மிதா கணேஷ, இஷான் சக்சேனா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் கிறாபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் வெகுஜன ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, பிரமிக்கத்தக்க பட மாளிகை அனுபவத்தை வழங்கும் என்பதால் ... மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் டிஜிட்டல் பார்வைகளை பெற்று வருகிறது.
அத்துடன் இந்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முதல் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.
இதனிடையே தீபாவளி திருநாளை குறி வைத்து சூர்யா நடிக்கும் 'சீன்' திரைப்படமும், பிரபுதேவா நடிக்கும் 'மூன் வாக்' திரைப்படமும் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் ... தற்போது நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2 'திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால்... இந்த தீபாவளி ரசிகர்களுக்கு மறக்க இயலாத தீபாவளியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM