“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்” : அஜித்துக்கு விளையாட்டுக் கார் வழங்கிய தமிழக முதல்வர் விஜய்! ; பதிலுக்கு அஜித் அளித்த தலைக்கவசம்! 

14 Sep, 2026 | 01:56 PM
image

இங்கிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு முதலமைச்சர் சென்று, நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்ததோடு, அந்த சுவாரஸ்யமான சந்திப்பு வேளையில் அஜத்துக்கு விளையாட்டுக் கார் ஒன்றை விஜய் பரிசாக வழங்கியுள்ளார்.

அதற்குப் பதிலாக அஜித், தலைக்கவசம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியமை தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில் விஜய் கடந்த 10ஆம் திகதி லண்டனுக்கு புறப்பட்டார். 

அங்கு விஜய் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதன் ஒரு முக்கிய நிகழ்வாக, கடந்த சனிக்கிழமை (12) சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலில் நடைபெற்ற கார் பந்தயத்தை கொடியசைத்து விஜய் ஆரம்பித்து வைத்தார். 

அந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்ற நிலையில், அன்றைய தினம் ஏற்பட்ட சந்திப்பின்போது, அஜித்தைக் கண்ட விஜய், சிரிப்பும் குதூகலமுமாக ஓடிச் சென்று, அஜித்தை கட்டியணைத்து, அஜித்தின் தோளில் முத்தமிட்டார்.

விஜயை இரு கரம் கூப்பி வரவேற்ற அஜித்தும், விஜயை கட்டியணைத்து தோளில் முத்தமிட்டு அன்பைப் பரிமாறிக்கொண்டார்.

இருவரும் பரஸ்பரம் அன்பு பரிமாறிக்கொண்ட தருணம் இரு நட்சத்திரங்களினதும் ரசிகர்கள் பெரும் சத்தம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

இதன்போது முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித் குமாருக்கு விளையாட்டுக் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்” என்று விஜய் கையெழுத்திட்ட அந்த விளையாட்டுக் காரினை விஜயிடமிருந்து அஜித் பெற்றுக்கொண்டார். 

அதன் பின்னர், அஜித் குமாரும் விஜய்க்கு தலைக்கவசம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். 

இருவரும் பரிசுகளை பரிமாறிக்கொண்ட புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33