(இராஜதுரை ஹஷான்)
அரச நிதியை மோசடி செய்து சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷர்கள் ஏன் சிறை செல்கிறார்கள் என்பதை அறிவார்ந்த மக்கள் நன்கு அறிவார்கள். ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவினர் கூட்டத்தை நடத்தினார்கள். கூட்டத்துக்கு வந்தவர்கள். நாமல் திருடர், என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக சென்றார்கள்.
மதுபானம் வழங்கி கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்கும் பழைய கலாசாரத்தில் இருந்து ராஜபக்ஷர்கள் இன்னும் விடுபடவில்லை.முறையற்ற வகையிலாவது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
அரச நிதியை மோசடி செய்து சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷ தன்னை நெல்சன் மண்டேலா என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். நெல்சன் மண்டேலா ஏன் சிறை சென்றார், ராஜபக்ஷர்கள் ஏன் சிறை செல்கிறார்கள் என்பதை அறிவார்ந்த மக்கள் நன்கு அறிவார்கள். ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை சட்டத்தின் பிரகாரம் முன்னெடுப்பது எவ்வாறு அரசியல் பழிவாங்கலாக அமையும்.ராஜபக்ஷர்களினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் பின்னரும் இவர்கள் நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு செயற்படுவது முறையற்றது என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM