(எம்.மனோசித்ரா)
தெஹிவளையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியையும் கவலையையும் தெரிவித்துள்ளதுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்ட்ரி ப்ரான்ச் தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், 'தெஹிவளையில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் மனவேதனையளிக்கிறது. எந்தவொரு குழந்தையும் இத்தகைய கொடூர வன்முறைக்கு இரையாகக் கூடாது.
இதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதில் கூறியாக வேண்டும். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி அதிகாலை முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு சகோதரர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தையும் காயமடைந்தார். தாக்குதலாளிகள் தவறுதலான வீட்டை இலக்கு வைத்து இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM