மாணவி வித்­தியா படு­கொலை வழக் கில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டு, மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட ஏழு பேரும் மூன்று வெவ்­வேறு சிறைச்­சா­லை­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

வித்­தியா படு­கொலை வழக்கில் சிறப்பு தீர்ப்­பா­யத்­தினால் கடந்த மாதம் 27ஆம் திகதி மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்ட ஏழு பேர் உட­ன­டி­யாக, கண்டி, பல்லேகல போகம்­பரை  சிறைச்­சா­லைக்கு அனுப்­பப்­பட்டனர்.   

தற்­போது ஒரே சிறைச்­சா­லையில்   வைக்­கப்­பட்­டி­ருந்த ஏழு குற்­ற­வாளிக ளும், பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக வெவ்வேறு சிறைச்­சா­லை­க­ளுக்கு நேற்று முன்­தினம்   மாற்­றப்­பட்­டனர்.

இவர்­களில் இருவர் வெலிக்­கடைச் சிறைச்­சா­லைக்கும், இருவர் மகர சிறை ச்­சா­லைக்கும் மாற்­றப்­பட்­டுள்­ளனர். மூன்று பேர் தொடர்ந்தும், போகம்­பரை   சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஒரே குற்­றத்­துடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் அனை­வ­ரையும் ஒரே இடத்தில் சிறை வைத்திருப்பதிலுள்ள பாதுகாப்பு பிரச்சினைகளைக் கருத் தில் கொண்டே இந்த மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன.