பௌத்த தேரர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பௌத்த தேரர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து இம் முறைப்பாடு தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக நேற்றைய தினம் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு வடமாகாண சபை உறுப்பினருக்கு குற்றப் புலனாய்வு பிரிவில் இருந்து அழைப்புக்கிடைத்திருந்தது.
எனினும் தமக்கு உடல் உபாதைகள் உள்ளமையினால் தினம் தினம் கொழும்புக்கு பயணம் செய்து வரமுடியாது என்றும் அவ்வாறு வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் யாழ்ப்பாணத்திற்கு வந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் அவர் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM