91.09 மீற்றர்! இலங்கையின் ரூமேஷ் பத்திரகே உலகின் உச்ச சாம்பியனானார் !

14 Sep, 2026 | 09:51 AM
image

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் பத்திரகே, புடாபெஸ்டில் நடைபெற்ற World Athletics Ultimate Championship Budapest 26 போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரூமேஷ் பத்திரகே, மூன்றாவது சுற்றில் 87.11 மீற்றர் தூரம் எறிந்து முன்னிலை பெற்றார்.

இதனையடுத்து இறுதிச் சுற்றில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 91.09 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தை உறுதி செய்தார்.

இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அண்டர்சன் பீட்டர்ஸ் 86.18 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

முதல் சுற்றில் முன்னிலை பெற்ற ஐரோப்பிய சாம்பியன் ஜூலியன் வெபர், 85.89 மீற்றர் தூரத்துடன் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

முன்னேற்றம் நிறைந்த சிறப்பான பருவத்தை நிறைவு செய்துள்ள ரூமேஷ் பத்திரகே, உலக தடகளத்தில் இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

றினோன் கழகத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது...

2026-10-11 16:06:32
news-image

பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது...

2026-10-11 15:29:57
news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13