கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக ரூ.5 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்த முயன்றதாகக் கூறப்படும் உகண்டா நாட்டைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உகண்டாவைச் சேர்ந்த விவசாயியான குறித்த நபர், சுமார் 90 கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய வில்லைகளை விழுங்கிய நிலையில், உகண்டாவின் என்டெப்பே நகரிலிருந்து கட்டார் நாட்டின் தோஹாவுக்கு பயணம் செய்துள்ளார்.
பின்னர், கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் QR-664 விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், நண்பகல் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் தங்கியிருந்துள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்துக்குள் இருந்தபோது அவர் விழுங்கியிருந்த கொக்கெய்ன் வில்லைகளில் 13 வில்லைகளை வெளியே எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காகவும், அவர் விழுங்கியதாகக் கூறப்படும் எஞ்சிய கொக்கெய்ன் வில்லைகளை வெளியேற்றுவதற்காகவும் சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன்பின்னர் குறித்த நபர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM