(நெவில் அன்தனி)
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இலங்கையை 72 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட இந்தியா நான்காவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இந்த சம்பியன் பட்டத்துடன் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் எட்டாவது தடவையாக இந்தியா சம்பியன் பட்டத்தை சூடியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த முன்னாள் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது.
ஸ்ம்ரித்தி மந்தனா, ஷவாலி வர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 77 பந்துகளில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஷபாலி வர்மா 39 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களை விளாசினார்.

அடுத்து ஆட்டம் இழந்த ஸ்ம்ரித்தி மந்தனா 39 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைக் குவித்தார்.
ஓட்ட வேகத்தை அதிகரிக்க விளைந்த ரிச்சா கோஷ் 17 ஓட்டங்களுடனும் ஹாமன்ப்ரீத் கோர் 14 ஓட்டங்களுடனும் ரிச்சா கோஷ் 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த குணாலன் கமலினி 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மிதாலி அயோத்யா, சமரி அத்தபத்து, சமுதி ப்ரபோதா ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்பியன் இலங்கை 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங் களைப் பெற்று சம்பியன் பட்டத்தை இந்தியாவிடம் பறிகொடுத்தது.
முதல் ஓவரிலேயே இமேஷா துலானி 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
எனினும் அணித் தலைவி சமரி அத்தபத்து (36), விஷ்மி குணரட்ன (20) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட முயற்சித்தனர்.
பத்தாவது ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அதன் பின்னர் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 9 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.
மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா 22 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை துடுப்பாட்டத்தில் வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை.
பந்துவீச்சில் ஸ்ரீ சாரணி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைபற்றினர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM