றினோனை வீழ்த்தி முதல் சுற்றில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி என்ற பெருமையை தக்க வைத்தது அப்கன்ட்றி லயன்ஸ்

Published By: Vishnu

13 Sep, 2026 | 09:10 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் தனது கடைசி லீக் போட்டியில் றினோன் கழகத்தை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்த்தாடிய அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் சுற்றில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி என்ற பெருமையை  தக்க வைத்ததுக்கொண்டது.

இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு கழகங்களும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. ஆனால், நேரம் செல்ல செல்ல அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தின் ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியது.

குறிப்பாக அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தின் வலதுகோடி முன்கள வீரர் மொஹமத் இஷான், மத்திய முன்கள வீரர் மொஹமத் ஆக்கிப்,  இடதுகோடி முன்கள விரர் நவீட் ஜூட் ஆகியோர் மிக வேகமாக பந்து நகர்த்தலிலும் பரிமாற்றங்களிலும் ஈடுபட்டு றினோன் கழகத்துக்கு சோதனையைக் கொடுத்தனர்.

எனினும் றினோன் பின்கள வீரர்களான கமீல் ஹக்கீம், நடீம் அஹமத், இம்மானுவேல் அனாஃபுல் ஆகியோர் தடுத்தாடலில் சிறப்பாக செயற்பட்டு கோல் போடப்படுவதைத் தடுத்தனர்.

எவ்வாறாயினும் போட்டியின் 40ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பந்தைப் பெற்றுக்கொண்ட ஆக்கிப் மிகவும் சாமர்த்தியாக றினோன் கழக பின்கள வீரர்களைப் பிரமிக்கச் செய்யும் வகையில் பந்தை சிப் (Chip) செய்தார்.

இளம் வீரர் மொஹமத் இஷான் வேகமாக முன்னோக்கி ஓடி பந்தை தனது நெஞ்சினால் கட்டுப்படுத்தி இடதுகாலால் கோலினுள் புகுத்தி அப்கன்ட்றி லயன்ஸ் அணியை முன்னிலையில் இட்டார்.

சற்று நேரத்தில் கோல் போடுவதற்கு கிடைத்த இலகுவான வாய்ப்பை ஆக்கிப் தவறவிட்டார்.

மறுபக்கத்தில் றினோன் சார்பாக மொஹமத் முஜீப், கிறிஸ்டியன் அஞ்சே ஆகிய இருவரும் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த கடுமையாக முயற்சித்தனர்.

ஆனால், அப்கன்ட்றி லயன்ஸ் பின்கள வீரர்களான ஜூட் சுபன், மொஹமத் முர்சீத், டக்கோஸ்டா எம்ப்பெம் ஆகியோரை அவர்களால் ஊடறுத்துச் செல்ல முடியாமல் போனது.

இடைவேளைக்குப் பின்னர் றினோன் கழகத்தின் ஆட்டத்தில் சற்று தளர்வு ஏற்பட்டதுடன் மத்திய கள வீரர்களால் முறையான பந்து பரிமாற்றங்களில் ஈடுபட முடியாமல் போனது.

அதேவேளை, மொஹமத் ஆக்கிப், நவீன் ஜூட், மொஹமத் அக்கீல் ஆகியோர் கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர்.

போட்டியின் 76ஆவது நிமிடத்தில் மொஹமத் இஷானின் கோர்ணர் கிக் பந்தை அப்துல் ரஹ்மான் யஹியா தனது தலையால் றினோன் கோலை நோக்கி முட்டிவிட்டார். றினோன் கோல்காப்பாளர் மொஹமத் ஹசன் அதனை தடுக்க முயன்றபோது பந்து அவரது கைகளில் பட்டு எகிறி வந்தது. அந்த சந்தர்ப்பத்தில் மொஹமத் ஆக்கிப் இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தி அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

சற்று நேரத்தில் மத்தியஸ்தர் தரங்க புஷ்பகுமாரவின் தீர்ப்பு ஒன்று தொடர்பாக கடுமையாக  வாதிட்ட றினோன் பயிற்றுர் பஸ்ருள் றஹ்மானுக்கு மஞ்சள் அட்டை எச்சிரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து தீரப்பாளர் மேசையை நோக்கிச் சென்ற றினோன் பயிற்றுநர்  jமீண்டும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மத்தியஸ்தர் தரங்க, சிவப்பு அட்டையைக் காட்டி அவரை வெளியேற்றினார்.  

உபாதையீடு நேரத்தின்போது மத்தியஸ்தரின் தீர்ப்பொன்று தொடர்பாக விமர்சித்த அப்கன்ட்றி லயன்ஸ் மாற்று வீரர் ஹர்ஷ பெர்னாண்டோவுக்கு மத்தியஸ்தர் மஞ்சள் அட்டை காட்டினார்.

இதேவேளை, அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தின் ஆதரவாளர் ஒருவர், வீரர்களின் ஆசனப் பகுதிக்கு சென்றது குறித்து நான்காவது மத்தியஸ்தர் மற்றும் போட்டி தீர்ப்பாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அந்த ஆதரவாளர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

எவ்வாறாயினும் போட்டி முடிவில் இரண்டு அணிகளினதும் வீரர்கள் கைகுலுக்கி சமரசமாக அரங்கை விட்டு வெளியேறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

றினோன் கழகத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது...

2026-10-11 16:06:32
news-image

பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது...

2026-10-11 15:29:57
news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13