கம்­பளை குருந்து வத்தை பிர­தே­சத்தில் சமய வகுப்­பிற்­குச்­சென்ற சிறு­மியை பாலியல் வல்­லு­ற­விற்­குட்­ப­டுத்த முயற்சித்ததாக கூறுப்படும் விகா­ரா­தி­ப­திக்கு எதி­ராக நேற்று பகல் குருந்து வத்தை நகரில் பிர­தேச வாசி­களால் ஆர்ப்­பாட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

கடந்த சில­வா­ரங்­க­ளுக்கு முன்னர் கம்­பளை குருந்­து­வத்தை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட விகா­ரையின் விகா­ரா­தி­பதி சமய வகுப்­பிற்குச் சென்ற சிறுமி ஒரு­வரை அங்கு ஒதுக்­குப்­பு­ற­மாக அமைந்­தி­ருந்த  அரச மரத்­திற்கு பின்­பு­ற­மாக அழைத்துச் சென்று பாலியல் வல்­லு­ற­விற்கு உட்­ப­டுத்த முயற்சி த்ததாக கூறப்டும் சம்­ப­வத்­தை­ய­டுத்து கைது செய்யப்பட்டார். 

கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் நிறுத்­தப்­பட்­ட குறித்த பிக்கு விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார்.    இச்­சந்­தர்ப்­பத்தில் ஊர்­மக்கள் இணைந்து குறித்த விகா­ரையை பூட்­டி­யி­ருந்த நிலையில் பிணையில் விடு­த­லையாகி வந்த குறித்த பிக்கு மீண்டும் விகா­ரைக்கு வந்து பூட்­டை உடைத்­து ­ விகாரைக்குள் சென்­றுள்ளார்.

இதன் போது ஒன்­று­கூ­டிய ஊர்­மக்கள் உட­ன­டி­யாக பிக்கு வெளி­யேற வேண்­டு­மென கூறி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு பட்டதையடுத்து குருந்து வத்தை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து பிக்குவை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.