ஜெனிவா கூட்டத் தொடரும் நீதிக்கான போராட்டங்களும்

13 Sep, 2026 | 03:24 PM
image

ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் தற்­போது நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. இலங்கை தொடர்­பான வாய்­மொழி அறிக்­கையை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் வெளி­யிட்­டி­ருக்­கிறார். அந்த அறிக்­கையை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் பிரதி உயர்ஸ்­தா­னிகர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யிட்­டி­ருந்தார்.

அதில் பல முக்­கிய விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும், காணாமல் போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணப்­ப­டு­வது அவ­சியம்,அதே­போன்று காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும், மாகாண சபை தேர்தல் நடத்­தப்­பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக ஆரா­யப்­ப­டு­வது அவ­சியம், மனித உரிமை காப்­பா­ளர்கள்– சிவில் சமூக செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரான அத்­து­மீ­றல்கள் நிறுத்­தப்­பட வேண்டும் உள்­ளிட்ட பல விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் பய­ணத்தைப் பொறுத்­த­வ­ரையில், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் வெளி­யிட்டு இருக்­கின்ற அறிக்கை மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்க ஒன்­றாக கரு­தப்­ப­டு­கி­றது.

மறு­புறம் இலங்கை அர­சாங்­கமும் இந்த அறிக்­கைக்கு ஒரு பதில் அறிக்­கையை வெளி­யிட்டிருக்­கி­றது. இதில் ஆதா­ரங்­களை திரட்டும் பொறி­மு­றையை நிரா­க­ரிக்­கின்றோம் என்றும், அது எவ்­வ­கை­யிலும் உள்­நாட்டில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற உள்­ளக பொறி­மு­றைக்கு ஊக்­கு­விப்­பாக அமை­யாது, அது அதனை குழப்பும் செயற்­பா­டாக அமையும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்­கையின் சார்பில் அறிக்­கையை வெளி­யிட்ட ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்­திற்­கான இலங்­கையின் பிர­தி­நிதி இந்த விட­யத்தை திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருக்­கிறார்.

இதுவும் ஒரு முக்­கி­ய­மான விட­ய­மாக கரு­தப்­ப­டு­கி­றது. அதே­போன்று இணை அனு­ச­ரணை நாடுகள், அதா­வது இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை முன்­வைத்த இணை அனு­ச­ரணை நாடு­களும் ஒரு கூட்டு அறிக்­கையை வெளி­யிட்டு இருக்­கின்­றன. அதிலும் பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களின் முக்­கி­யத்­துவம், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் மற்றும் காணாமல் போனோர் விவ­காரம், காணி, மாகாண சபை தேர்தல் உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்­பாக பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போன்று பல்­வேறு மனித உரிமை அமைப்­பு­களும் தற்­போது இது தொடர்­பாக அறிக்­கை­களை வெளி­யிட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

உள்­நாட்­டிலும் அர­சியல் கட்­சிகள், சிவில் சமூக அமைப்­புகள் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை மற்றும் இலங்­கையின் பதில் அறிக்கை தொடர்­பாக கருத்­துக்­களை வெளி­யிட்டு இருக்­கின்­றன. வடக்கு, கிழக்கு தமிழ்க்கட்­சி­களின் பிர­தி­நி­திகள் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கையை வர­வேற்­றி­ருக்­கின்­றார்கள். ஆனால், அதே­நேரம் இலங்­கை­கான அழுத்தம் இதனை விட பாரி­ய­ளவில் பிர­யோ­கிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்தை வெளி­யிட்டு இருக்­கி­றார்கள். அதா­வது, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் இலங்கை மீதான அழுத்தம் போது­மா­ன­தாக இல்லை என்­பது போன்றே தமிழ் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களின் கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன.

அர­சாங்­கத்தை பொறுத்­த­வ­ரையில் இந்த ஐ.நா. மனித உரிமை கூட்­டத்­தொடர் மிக முக்­கி­யத்­து­வ­மாக இருக்­கி­றது. காரணம் 57/1 என்ற பிரே­ரணை தற்­போது நடை­மு­றையில் இருக்­கின்­றது. அந்த பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­க­ளுக்கு, ஏற்­பா­டு­க­ளுக்கு அமை­வா­கவே இந்த வாய்­மொழி அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரினால் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

அந்த வகை­யி­லேயே அர­சாங்­கமும் பதி­ல­ளித்­தி­ருக்­கி­றது. ஆனால், இங்கு என்ன பிரச்­சினை என்றால், இங்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்டும் செயற்­பாட்டில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் எவ்­வாறு செயல்­ப­டு­கி­றது? அந்த செயற்­பா­டு­க­ளி­னூ­டாக ஏதா­வது தாக்கம் இருக்­கின்­றதா? அந்த தாக்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நன்­மையை பெற்­றுக்­கொ­டுக்­கி­றதா? என்ற கேள்­வி­யாகும்.

அதற்கு சகல தரப்­பி­னரும் தமது பதில்­களை அளிக்க வேண்­டிய தேவை காணப்­ப­டு­கி­றது. காரணம், அந்த பதில்­களின் ஊடா­கவே இலங்கை அடுத்த கட்­டத்தை நோக்கி நகர முடியும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா இல்­லையா என்ற விடயம் தொடர்­பாக ஆராய முடியும்.

பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதிக்­காக பல வரு­டங்­க­ளாக போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். கடந்த ஆகஸ்ட் மாத இறு­தியில் கூட சர்­வ­தேச காணாமல் போனோர் மாநாட்டை பாதிக்­கப்­பட்ட மக்கள் வடக்கில் நடத்தி இருந்­தனர். அதில் தமக்­கான நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்றும், காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்ற உண்மை வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வது அவ­சியம் என்றும் அவர்கள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

அதே­போன்று பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக அவ்­வப்­போது ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் கவ­ன­யீர்ப்பு போராட்­டங்­க­ளையும் நடத்தி வரு­கின்­றனர். ஆனால், பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமக்­கான நீதியை இன்னும் பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் திண்­டா­டிக்­கொண்டு தவித்­துக்­கொண்டு இருக்­கின்­றனர். காணாமல் போன தமது உற­வுகள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா இல்­லையா என்­பது கூட தெரி­யாமல் அந்த மக்கள் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதே­போன்று பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பாட்டில் பல விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. எந்த விட­யத்­திற்கும் இன்னும் உறு­தி­யான தீர்வு கிடைக்­கப்­ப­ட­வில்லை. காணிகள் இன்னும் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்ந்து பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் இன்னும் நீக்­கப்­ப­ட­வில்லை.

பொறுப்­புக்­கூறல், நீதி பொறி­முறை தொடர்­பான வடிவம் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான அலு­வ­ல­கங்கள் எவ்­வாறு  செயல்­ப­டு­கின்­றன என்ற கேள்வி எழு­கின்­றது. அதே­போன்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை எவ்­வாறு அந்த தாக்­கத்தை இந்த விட­யத்தில் ஏற்­ப­டுத்­து­கி­றது என்ற கேள்வி இங்கு எழு­கி­றது. எனவே, நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் இன்னும் பாரிய முன்­னேற்றம் தேவைப்­ப­டு­கி­றது. முன்­னேற்றம் இல்­லா­ம­லேயே இந்த செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு கொண்­டி­ருக்­கின்­ற­மை­யா­னது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

எனவே அடுத்த கட்­ட­மாக என்ன நடக்கப் போகி­றது என்ற கேள்வி எழு­கி­றது. வெறு­மனே அறிக்­கை­களை மனித உரிமை பேர­வையில் தாக்கல் செய்­து­விட்டு, அதனை வாசித்­து­விட்டு, அது­தொ­டர்­பாக ஒரு சிறிய விவா­தத்தை நடத்­தி­விட்டு, தமது அடுத்­த­கட்ட வேலை­க­ளுக்கு சென்­று­விட்டால் அது சரி­யா­குமா என்ற கேள்வி எழு­கி­றது. பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் தாக்கம் செலுத்­தப்­ப­டு­வது எப்­போது? அவர்­க­ளுக்கு எப்­போது நீதி கிடைக்கும்? அவர்­க­ளுக்கு எப்­போது உண்மை வெளிப்­ப­டுத்­தப்­படும்? போன்ற கேள்­வி­க­ளுக்கு இன்னும் பதில் இல்­லாமல் இருக்­கி­றது. அந்த கேள்­வி­க­ளுக்கு பதில் அவ­சி­ய­மாக தேவை­யாகும்.

காலம் ­கா­ல­மாக இந்த பிரச்­சினை நீடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இது­வரை இலங்கை தொடர்­பாக ஒன்­பது பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. ஆனால் இது­வரை அந்த மக்­க­ளுக்கு நீதி கிடைத்­ததா? காணாமல் போனோர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­னரா? உண்­மைகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­ட­னவா? என்ற கேள்­விக்கு பதில் இல்லை. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும். பொறுப்­புக்­கூறல், நல்­லி­ணக்க செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சியம். காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்ற உண்மை வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வது முக்­கி­ய­மாகும். அதே­போன்று பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். இது­போன்ற பல விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. அந்த விட­யங்­களை எப்­படி அனை­வரும் இணைந்து முன்­னெ­டுக்­கின்­றனர், அர­சாங்­கமும் ஐ.நா. மனித உரிமை பேர­வையும் இணைந்து இந்த விட­யத்தில் எப்­படி செயல்­ப­டப்­போ­கி­றது அல்­லது அர­சாங்­கத்­துடன் இணைந்து ஐ.நா. மனித உரிமை பேரவை எப்­படி செயல்­ப­டப்­போ­கி­றது என்ற பல கேள்­விகள் இங்கு எழு­கின்­றன. சிவில் சமூக தரப்­பி­னரின் வகி­பாகம் என்ன? அர­சியல் கட்­சி­களின் பிரதிநிதிகள் என்ன கூறுகிறார்கள்? சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் என்ன கூறுகிறார்கள்? போன்ற பல கேள்விகள் இங்கு எழுகின்றன.

இந்தப் பின்னணியிலேயே தற்போது மனித உரிமை பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். அவர்கள் மீதான தாக்கம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்வி களுக்கு பதிலளிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு வெறுமனே கூட்டங்களையும் நடத்திக்கொண்டு, ஆவணங்களை மட்டும் தாக்கல் செய்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. மாறாக, தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான செயற்பாடுகள் ஐ.நா. மனித உரிமை பேரவை மட்டத்திலும் அரசாங்க மட்டத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள்

2026-10-11 16:09:11
news-image

யுத்த வடுக்களை நீக்குவதற்கும் நல்லிணக்கத்துக்கும் என்ன...

2026-10-04 10:22:46
news-image

சூத்திரதாரிகளை கண்டறியும் விசாரணையை தொடருங்கள்

2026-09-27 15:04:33
news-image

தமிழ்ப் பேசும் மக்கள் பேரவையின் துரித...

2026-09-20 17:19:18
news-image

ஜெனிவா கூட்டத் தொடரும் நீதிக்கான போராட்டங்களும்

2026-09-13 15:24:39
news-image

தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ஐ.நா. மனித உரி­மைகள்...

2026-09-06 15:44:48
news-image

உண்மைகளை தொடர்ந்து மறைத்து வைக்கக் கூடாது

2026-08-30 14:09:47
news-image

கட்டுக்கதைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது

2026-08-23 12:19:51
news-image

அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது...

2026-08-16 08:35:16
news-image

இந்தியாவின் வலியுறுத்தலும் இலங்கையின் யதார்த்த நிலையும்

2026-08-09 15:54:39
news-image

அரசியல் தீர்வு குறித்த சசி தரூரின்...

2026-08-02 10:05:20
news-image

கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய...

2026-07-26 15:26:43