இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் ஜாவா கடலில் மாயமான ‘வர்ஜோ டிரான்ஸ்போர்ட் 8’ பயணிகள் கப்பலில் இருந்தவர்களில் 103 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜாவாவின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தனில் உள்ள பஞ்சர்மாசின் நகரை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, குறித்த கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை தொடர்பை இழந்துள்ளது.
தொடர்பை இழப்பதற்கு முன்னர், கப்பல் ஒரு பக்கமாகச் சாய்வதாக அதன் மாலுமி தகவல் தெரிவித்திருந்ததாக மீட்புக் குழுத் தலைவர் ஐ புட்டு சுதயானா தெரிவித்துள்ளார்.
கப்பல் மாயமான பகுதி, அது செல்ல வேண்டிய இலக்கிலிருந்து சுமார் 150 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 2.5 மீற்றர் (8.2 அடி) உயரத்துக்கு அலைகள் எழும் வகையில் கடும் சீற்றமான வானிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
40 மீற்றர் நீளமுடைய பெரிய மீட்புக் கப்பல்களுக்குக்கூட குறித்த கடற்பகுதி ஆபத்தானதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கப்பலில் இருந்த ஏனைய பயணிகளைக் கண்டறியும் நோக்கில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தோனேஷியாவில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமை மற்றும் எதிர்பாராத மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கடல் விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பை ஆவணப்படுத்தச் சென்ற ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட எட்டு பேர் பயணித்த விசைப்படகு ஒன்று பாந்தன் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை மாயமாகியுள்ளதுடன், அதனைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
மேலும், கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி 211 பேருடன் பயணித்த படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் சுலவேசி தீவின் செலாயார் தீவுக்கு அருகே 70க்கும் மேற்பட்டோர் பயணித்த படகு கடலில் மூழ்கிய சம்பவமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM